இளையதம்பி தங்கராசா. கனடா: நாவற்குடா இளையதம்பி தங்கராசா, 4000 King Road, King City, Ontario L7 B1K4, 1வது பதிப்பு, 2015. (Canada: A Fast Print, 2703 Eglinton Avenue East). xxvii, 560 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மட்டக்களப்புப் பிரதேசத்தின் இயற்கை வளம், விருந்தோம்பல், வழக்கில் உள்ள மந்திரச்சடங்கு, வழிபாடுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மீன் பிடித்தொழில்கள், அறுவடைத்தொழில்கள், உணவுப் பழக்கவழக்கம், மக்களின் திருமண உறவுகள், நாட்டார் வழக்குகள், பாடல்கள், பழமொழிகள், கல்விமுறைகள் என யாவற்றையும் இந்தப் புதினத்தில் பொருத்தமான இடங்களில் அமைத்து, கற்பார்க்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளார். அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா செல்லுதல், அங்கிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு வருவது, அங்குச் சரயு என்ற பெண்ணைச் சந்திப்பது, மெனிக்கே என்ற சிங்களப் பெண்ணைக் காண்பது, சென்னைக்கு வருதல், சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் அமைந்துள்ள கோயில்களைப் பார்த்துக்கொண்டு, சென்னைக்குத் திரும்புவது என்பவை கதைப்போக்காக உள்ளன. இடையிடையே கோயில்கள் குறித்து அளித்துள்ள விளக்கங்கள் தங்கராசா அவர்களின் சமய ஈடுபாட்டையும் இசைப்புலமையையும் காட்டுகின்றன. மட்டக்களப்புப் பிரதேசத்தின் நாவற்குடாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இ.தங்கராசா. இலங்கை மத்திய வங்கியில் ஆய்வுத்துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் மட்டக்களப்பு மாமாங்கேசுவரப் பிள்ளையார் மான்மியம் என்ற நூலை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி 2008இல் வெளியிட்டவர்.
Black Hawk Za Darmo Erreichbar Na Slotsup
Content Banking & Bonusse: spielautomaten tricks novoline Sizzling Hot Deluxe Had been Ist Inside Unserem Online Spielbank Bloß Einzahlung Bonus Dringend? Wie gleichfalls Beantrage Selbst