14800 மானிடம் வீழ்ந்ததம்மா.

இ.தியாகலிங்கம். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மார்ச் 2015. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி). 168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1- 329-02347-5. வரலாற்றை மனிதன் மறக்கும் போது அது மீண்டும் மீண்டும் உயிர்பெற்றுக் கொள்ளும். உலகம் பல மனிதநேயச் சுடலைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. வசதிக்கு ஏற்ப அவற்றை மறக்கப் பார்க்கிறது. சுடலைகளை மறந்ததால் உருவாக்கப்பட்ட பிணமலைகளை இரண்டாம் உலகயுத்தம் கண்டது. உலகம் பிரயாணிக்கக்கூடாத தடத்தில், தெரிந்தோ தெரியாமலோ பிரயாணிக்கிறது. வரலாறு மீண்டும் உயிர் பெற்றுவிட்டது. போகங்கள் தங்களுக்கு மட்டுமே என்கின்ற சுயநலத்தில் வெறுப்புகள் விளைகின்றன. மனிதம் வதைபடுகிறது. பொருளாதாரத்தில் மனிதநேய ஆதாரங்கள் அடிபட்டுப் போகின்றன. சிறிய தவறுகள் தட்டிக் கேட்கப்படாத போது, அதுவே பெரிய தவறுகளின் விளை நிலமாகிறது. மனிதம் வஞ்சிக்கப்படுவதைப் பார்த்தும் பாராமல் இருப்பது எதற்கு உரம் இடுவதற்கு? மனிதகுலம் இனியாவது விழிப்படைய வேண்டும். நாசகாரமான அந்த வரலாற்றை மீண்டும் ஓடவிடலாகாது. அதை நிறுத்தப் போராடவேண்டும். அந்த நாசகாரம் உலகத்தில் மீண்டும் ஏற்படக்கூடாது என்கின்ற ஆதங்கத்தில் இந்த நாவல் எழுதப்பட்டது.

ஏனைய பதிவுகள்

17840 கதைப்பந்தாட்டம்: சுவைஞனின் மதிப்பீட்டுப் படிவம்.

இ.சு.முரளிதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2025. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 100 பக்கம், விலை: ரூபா 500.00,