14800 மானிடம் வீழ்ந்ததம்மா.

இ.தியாகலிங்கம். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மார்ச் 2015. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி). 168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1- 329-02347-5. வரலாற்றை மனிதன் மறக்கும் போது அது மீண்டும் மீண்டும் உயிர்பெற்றுக் கொள்ளும். உலகம் பல மனிதநேயச் சுடலைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. வசதிக்கு ஏற்ப அவற்றை மறக்கப் பார்க்கிறது. சுடலைகளை மறந்ததால் உருவாக்கப்பட்ட பிணமலைகளை இரண்டாம் உலகயுத்தம் கண்டது. உலகம் பிரயாணிக்கக்கூடாத தடத்தில், தெரிந்தோ தெரியாமலோ பிரயாணிக்கிறது. வரலாறு மீண்டும் உயிர் பெற்றுவிட்டது. போகங்கள் தங்களுக்கு மட்டுமே என்கின்ற சுயநலத்தில் வெறுப்புகள் விளைகின்றன. மனிதம் வதைபடுகிறது. பொருளாதாரத்தில் மனிதநேய ஆதாரங்கள் அடிபட்டுப் போகின்றன. சிறிய தவறுகள் தட்டிக் கேட்கப்படாத போது, அதுவே பெரிய தவறுகளின் விளை நிலமாகிறது. மனிதம் வஞ்சிக்கப்படுவதைப் பார்த்தும் பாராமல் இருப்பது எதற்கு உரம் இடுவதற்கு? மனிதகுலம் இனியாவது விழிப்படைய வேண்டும். நாசகாரமான அந்த வரலாற்றை மீண்டும் ஓடவிடலாகாது. அதை நிறுத்தப் போராடவேண்டும். அந்த நாசகாரம் உலகத்தில் மீண்டும் ஏற்படக்கூடாது என்கின்ற ஆதங்கத்தில் இந்த நாவல் எழுதப்பட்டது.

ஏனைய பதிவுகள்

12776 – தேடலின் வலி (கவிதைகள்).

ரமேஷ் வவுனியன். ஜேர்மனி: ரமேஷ் வவனியன், 1வது பதிப்பு, ஜனவரி 2017. (வவுனியா: கலைமகள் அச்சகம், இல. 50, சந்தை சுற்றுவட்ட வீதி). 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5 x 12.5

13029 தமிழ் இதழியல் நோக்கும் போக்கும்: பன்னாட்டு இதழியல் கருத்தரங்க ஆய்வுக்கோவை.

தெ.மதுசூதனன், நந்தவனம் சந்திரசேகரன், தி.நெடுஞ்செழியன், உ.பிரபாகரன், (பதிப்பாசிரியர்கள்). திருச்சி 620003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, 2018. (திருச்சி: இனிய நந்தவனம் பதிப்பகம்).96 பக்கம், விலை:

12810 – பன்னீர் வாசம் பரவுகிறது (சிறுகதைகள்).

மருதூர் ஏ.மஜீத். கல்முனை: ஸாகிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1979. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்). (4), 74 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18 x 12.5

14958 பேராசிரியர் ம.மு.உவைஸம் இஸ்லாமிய தமிழ் இலக்கியமும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 32 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ.,

14306 இலங்கை மத்திய வங்கி: அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் முக்கிய பண்புகள் 2002.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2002. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன்