14801 மீண்டும் ஒரு காதல் கதை (நாவல்).

யோகா யோகேந்திரன். திருக்கோவில்: யோகா யோகேந்திரன், யோகவாசா, 1வது பதிப்பு, 2014. (திருக்கோவில்: A.T. அச்சகம்). Viii, 157 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 18×12 சமீ., ISBN: 978-955- 41546-0-5. செங்கதிர் சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவல். கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர் யோகா யோகேந்திரன். அரச எழுதுவினைஞராகப் பணியில் இணைந்த இவர் பின்னர் ஆசிரியராக, அதிபராகப் பணியாற்றி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர். சர்வதேச பெண்கள் அமைப்பினால் சிறந்த பெண் எழுத்தாளர் விருது, திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினரின் அரியநாயகம் விருது, திருக்கோவில் பிரதேச கலாச்சார விருது, 894.8 (5) தமிழ் நாவல்கள், குறுநாவல்கள் நூல் தேட்டம் – தொகுதி 15 451 கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, கலாபூசணம் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

14069 சைவ சமய வாழ்வியற் சிந்தனைகள்.

சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: சரவணமுத்து அம்பலவாணர் அந்தியேட்டித் தின வெளியீடு,சாயுடை, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2004. (கொழும்பு 13: கீதாபதிப்பகம்). xx, 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ. கலாபூஷணம்

14023 உலகெலாம் ;

மட்டுநகர் ராகுல் நாயுடு (இயற்பெயர்: நல்லசாமி பிரதீபன்). மட்டக்களப்பு: நல்லசாமி பிரதீபன், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஜுன் 2014. (மட்டக்களப்பு: Talent Advertising Marketing). xxvi, 125 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 490.,

14419 மட்டக்களப்புச் சொல்வெட்டு.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: கா.தா. செல்வராசகோபால், மூலம்), பி.ப.செல்வராசகோபால் (தொகுப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், தோற்றாத்தீவு-2, 1வது பதிப்பு, 1984. (களுவாஞ்சிக்குடி: செ.இதயசோதி பெஞ்சமின், மனோகரா அச்சகம், தோற்றாத்தீவு). 40 பக்கம், விலை: ரூபா