14801 மீண்டும் ஒரு காதல் கதை (நாவல்).

யோகா யோகேந்திரன். திருக்கோவில்: யோகா யோகேந்திரன், யோகவாசா, 1வது பதிப்பு, 2014. (திருக்கோவில்: A.T. அச்சகம்). Viii, 157 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 18×12 சமீ., ISBN: 978-955- 41546-0-5. செங்கதிர் சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவல். கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர் யோகா யோகேந்திரன். அரச எழுதுவினைஞராகப் பணியில் இணைந்த இவர் பின்னர் ஆசிரியராக, அதிபராகப் பணியாற்றி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர். சர்வதேச பெண்கள் அமைப்பினால் சிறந்த பெண் எழுத்தாளர் விருது, திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினரின் அரியநாயகம் விருது, திருக்கோவில் பிரதேச கலாச்சார விருது, 894.8 (5) தமிழ் நாவல்கள், குறுநாவல்கள் நூல் தேட்டம் – தொகுதி 15 451 கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, கலாபூசணம் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

15865 ஆரம்ப புவியியல்: எட்டாம் வகுப்புக்குரியது.

க.குணராசா. யாழ்ப்பாணம்: க.குணராசா, 40, கல்லூரி வீதி, நீராவியடி, 5ஆவது பதிப்பு, பெப்ரவரி 1973, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). 173 பக்கம், விளக்கப்படங்கள்,