14809 ரஸ்யாவின் ரஸ்புட்டீன் தீர்க்கதரிசியா? மக்கள் புரட்சிக்கு வித்திட்டவரா? (சரித்திர நாவல்).

எம்.ரி. செல்வராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 94: பி.வி.ஆர். ஆப்செட்). xxx, 390 பக்கம், விலை: இந்திய ரூபா 160., அளவு: 18×12 சமீ., ISBN: 978-81- 927041-2-8. மதப் போர்வையில் புகுந்துகொண்டு மக்களை ஏமாற்றி மன்னனை மயக்கி ருஷ்ய நாட்டைச் சீரழித்த வஞ்சகப் பாதிரி என்றே ரஸ்புடீன் பற்றிய கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரஸ்புட்டீன் ஒரு தீர்க்கதரிசியா? மக்கள் புரட்சிக்கு வித்திட்டவரா? என்பதை ரஸ்புட்டீனின் வாழ்க்கைச் சம்பவங்களினூடாக எழுதப்பட்டுள்ள இந்தச் சரித்திர நாவல் மூலம் விடைகாண முற்பட்டுள்ளார். இந்நாவல் விண்ணிலே எரிநட்சத்திரம் மண்ணிலே ரஸ்புட்டீன், முதல் சோகம், வயதுக்கு மிஞ்சிய வார்த்தைகள், வயதுக் கோளாறு, திருமணம், புதிய அனுபவங்கள், சமயமும் சல்லாபமும், புனிதமான யாத்திரையா?, புகழின் ஆரம்பம், தலைநகரில் பதித்த கால்கள், அரச பரம்பரை, அரச பரம்பரையின் அறிமுகம், மீண்டும் பிறந்த இடத்தில், தலைநகரில் ஆரம்ப எதிரிகள், குற்றவாளியா? சுற்றவாளியா?, அரசியாரின் அழைப்பு, அரசியல் பிழைத்தல், உயிருக்கு வந்த ஆபத்து, பக்தியா? போலியா?, வெற்றியும் தோல்வியும், அழிவின் உச்சியில், ஃபீலிக் யுசெப்போ, கடைக்கண் பார்வை செய்த கொடூரம், உயர்கல்வியும் திருமணமும், திடமான முடிவு, திட்டங்களும் தீர்க்கதரிசனமும், கொலைக்களம் நோக்கி, கொடூரங்கள் அடங்கின, மகிழ்ச்சியும் மனச்சோர்வும், சாம்ராஜ்யம் சரிந்தது, கனவிலும் காணாத முடிவுகள், பொலிஸ் அறிக்கை, முடிவு ஆகிய 33 அத்தியாயங்களில் விரிந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 065198).

ஏனைய பதிவுகள்