14816 வீடு.

திக்குவல்லை கமால் (இயற்பெயர்: முகம்மது ஜெலால்தீன் முகம்மது கமால்). பத்தரமுல்ல: கலாசார அலுவல்கள் திணைக்களம், 8வது மாடி, செத்சிரிபாய, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (ராகம: நெலும் பிரின்டர்ஸ்). viii, 101 பக்கம், விலை: ரூபா 280.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0353- 34-7. வீடு என்ற ஒற்றை வார்த்தையில் தனி மனிதனின் போராட்ட வாழ்க்கை மிக அழகாக இந்நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளது. கமாலின் படைப்பாக்க முயற்சிகளுள் குறிப்பிடத் தக்கது அவரது நாவலிலக்கிய முயற்சியாகும். “ஒளி பரவுகிறது” (1995), “நச்சு மரமும் நறு மலர்களும்” (1998),”பாதை தெரியாத பயணம்” (2000),”உதயக் கதிர்கள்” (2006),”ஊருக்கு நாலுபேர்” (2007),”தெளிவு” (2009) ஆகிய நாவல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன. “உதயகதிர்கள்” என்ற நாவல் எஸ்.ஏ.ஸி.எம். கராமத்தினால் சிங்களமொழிக்கு “ராழியா” எனும் பெயரில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வீடு நாவல், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2013ஆம் ஆண்டுக்கான திறந்த கையெழுத்துப் பிரதியாக்கப் போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றிப் படைப்பு.

ஏனைய பதிவுகள்