ஜயசேன ஜயக்கொடி (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (6), 7-335 பக்கம், விலை: ரூபா 850., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-30- 9569-5. சிங்கள இலக்கியத்தில் பிரபல்யம் வாய்ந்த ஓர் எழுத்தாளராக வாசகர் மத்தியில் தன் அடையாளத்தைப் பதியவைத்த ஜெயசேன ஜெயக்கொடியின் “அமாவெஸ்ஸ” என்ற சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. கௌதம புத்தரின் நற்குணங்களைப் பற்றியும் உலக ஜீவராசிகள் மீது அவர் பரப்பிய பெருங்கருணை பற்றியும் பக்தி நிறைந்த மனப்பாங்குடன் இந்நாவலில் விளக்கியுள்ளார். பாரத தேசத்தின் வடக்கிலிருந்த கபிலவஸ்து இராச்சியமே புத்தபகவானின் ஜன்மபூமி. அவரது தந்தையார் சுத்தோதனன் அத்தேசத்தின் தந்தை. அரசாள இராச்சியமும் பணிவிடை செய்ய சேவகர்களும் வாழ்வின் வளங்கள் அனைத்தும் இருந்தபோதிலும், கௌதமர் அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு மனிதன் படும் துயரத்துக்கு பரிகாரம் தேட முனைகிறார். அதன் உண்மையைக் கண்டறிந்து தன் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார். ஆசையினால் வரும் கேட்டையும் அன்பின் பெருமையையும் போதித்த வண்ணம் பாரதத்தின் பலகாத தூரம் நடக்கின்றார். சிரசில் கிரீடம் தரித்த மன்னரெல்லாம் அவரை நாடி வருகிறார்கள். சாதாரண குடிமக்களும் அவரது போதனைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். அவர் பொழிந்த அமுத மழையே இந்நாவலாகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65493).