தொகுப்பாசிரியர் குழு. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 3வது பதிப்பு, வைகாசி 1949, 1வது பதிப்பு, மார்கழி 1940, 2வது பதிப்பு, தை 1942. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 118 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலக்கியம், வரலாறு, தத்துவம், கலை, கைத்தொழில் முதலிய துறைகளில் கைதேர்ந்த ஆசிரியர் பலர் எழுதிய கட்டுரைகளின் திரட்டு. இலக்கியச் சுவை (சுவாமி விபுலாநந்தர்), புரவலரும் புலவரும் (ரா.பி.சேதுப்பிள்ளை), புராதன திரிபுரி (நா.பொன்னையா), ஆருயிர் தந்த அரும்பெறலாழி (பண்டிதர் மு.நல்லதம்பி), ஒல்லாந்தர் கால யாழ்ப்பாணம் (டொக்டர் க.கணபதிப்பிள்ளை), நாகரிகம் (எஸ்.சோமசுந்தர பாரதி), தமிழ் நூல்களில் மகளிர் மாண்பு (வித்வான் வே.சிவக்கொழுந்து), பரிமேலழகர் (பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்), பூ (குல. சபாநாதன்), வசனத்தமிழ் (சோ.சிவபாதசுந்தரம்), சங்கீதம் (மு.ஆறுமுகம்), உழுதொழில் (பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்) ஆகிய பன்னிரு கட்டுரைகளும், ஈற்றில் உரைக் குறிப்பும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18929).
14570 இப்படிக்கு தங்கை: புனர்வாழ்வு காலத்தின் உண்மைப் பதிவு-2010.
வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). மன்னார்: வேலு சந்திரகலா, 1வது பதிப்பு, மார்ச் 2017. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). 32 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 16×10.5