மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (வவுனியா: வாணி கொம்பியூட்டர் பிரின்டிங் சென்டர்). xiv, 15-210 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955- 38691-0-4. கிருஷ்ணிகா வெளியீட்டகத்தினரின் எட்டாவது பிரசுரமாக வெளிவந்துள்ள நூல் இது. மைதிலி தயாபரனின் பதினொராவது நூலாகவும் இது அமைந்துள்ளது. இந்நூலில் உள்ள இலக்கியக் கட்டுரைகள், மகாபாரதத்தினை நுண்ணாய்வுக்கு உட்படுத்தி இன்றைய எமது வாழ்வியலோடு அதனை ஒப்பிட்டு விளக்குவனவாக உள்ளன. கலியுகத்திற்குத் தேவையான பாரதத்தின் சாரம், புயலுக்குப் பின்னதான அமைதி, மகாபாரதச் சுருக்கம், இழந்தது ஏதும் உன்னுடையதா?, மாற்றம் எனப்படும் மாறாத உண்மை, அண்ட பிரபஞ்சத்தில் எமக்குரிய பங்கு, சதுரங்கமும் வரலாறும், கதைக்கு ஆசிரியர் வரவு, அரங்கை அமைத்தனர் ஆடுவதற்கு, ஆட்டத்தைத் தொடங்கவென வந்தவர்கள், ஆடுகளத்திற்குக் குருகுல வீரர் வருகை, தந்தை வயிற்றில் உதித்த தனயன், ஏட்டிக்குப் போட்டியாகும் வாழ்க்கை, வளைந்து செல்லும் வாழ்க்கைப் பாதை, கதாநாயகனின் முதல் நகர்வு, தேவர்க்கு மேலாக மானுடர்க்கு அன்னை, செயற்கரியன செய்த பீஷ்மர், பேதை என்பதாற் பேதமையா?, இடம்மாறும் இளமையும் முதுமையும், மன்னரை மயக்கவந்த மான், நம்பிக்கைப் பயிரிலே விளைவாகும் துரோகம், காலமின்றிக் கவர்ந்திழுக்கும் களவியல், நற்பிரசைகளை உருவாக்குவதில் இன்றைய கல்வியின் பங்கு ஆகிய 23 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
Safest Web based casinos in the usa Safe Gambling within the 2024
Content How will you Determine if a bona-fide Money Internet casino are Legitimate? Tips allege a free of charge revolves added bonus – detailed book