கண்ணன் கண்ணராசன். யாழ்ப்பாணம்: சாரல் வெளியீட்டகம், சித்தங்கேணி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). x, 89 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-2596-45-2. கொடிகாமம் கச்சாயில் பிறந்தவர் கண்ணராசன். ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இவர், ஏற்கெனவே கிறுக்கிப்போட்ட காகிதங்கள், கற்பனையில்லா ஒப்பனைகள் ஆகிய இரு கவிதை நூல்களை வழங்கியவர். அவரது மூன்றாவது நூலாக இக்கட்டுரைத் தொகுதி வெளிவந்துள்ளது. இதில் பயம் என்பதே பயம். பயத்தின் பயம். பயமறியும்/ சண்டைக்குப் பிந்து சபைக்கு முந்து/ காகத்துக்குச் சோறு வைப்பது ஏன்?/அரசனைப் பார்த்த கண்ணுக்குப் புருசனைப் பார்க்கப் பிடிக்காது/ கொன்றால் பாவம் தின்றால் தீரும்/ வேடிக்கையும் வேதனையும்/ பொறுத்தார் நாடாளுவார் பொங்கினார் காடாளுவார்?/ குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும்/ அன்பென்றால் என்ன?/ தேர் முடியும் திரு திருமதியும்/ தம்பியுடையான் படைக்கு அஞ்சான்/ காகம் திட்டி மாடு சாவதில்லை (சாகாது)/ குங்குமப் பொட்டும் குட்டிக்கரணமும்/ ஊரோடு ஒத்து வாழு (வாழ்வு)/ சோழியன் குடும்பி சும்மா ஆடாது/ பூப்புனித நீராட்டுச் சடங்கில் தாய்மாமன்/ தேங்காய் உடைப்பது ஏன்?/தும்பிக்கை ஆகாத நம்பிக்கை/ தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும்/ பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்/ காதில் பூ வைப்பது ஏன்?/ போன காய்ச்சலை புளிவிட்டு கூப்பிடு (கூப்பிடாதே)/ இல்லறம் நல்லறம் ஆவது யார் கையில் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சுவையான இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
Play Lucks Casino Ports Web dr watts up slot site, Big Earnings and Benefits
Articles Why you need to Like Mr Spin On the web Bingo Future of Shell out By the Cellular telephone Expenses Ports In the Online