14851 நினைவுகளும் கனவுகளும்.

வே.சு.கருணாகரன். புங்குடுதீவு: சூழலியல் மேம்பாட்டு அமைவனம் (சூழகம்), 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 13: சண் பதிப்பகம், இல. 44A, ஸ்ரீ கதிரேசன் வீதி). xiii, 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. புங்குடுதீவைச் சேர்ந்த நூலாசிரியர் ஒரு வர்த்தகராவார். தான் வாசித்தறிந்த தகவல்களை பலரும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற அவாவில் சிறு கட்டுரைகளாக இந்நூலில் வழங்கியிருக்கிறார். எனது தாய்மண், இயற்கையோடு இணைந்த வாழ்வு, எமது கிராமத்தின் இயற்கை வளம், பொருளாதார வளத்தைத் தரும் மரங்கள், பனைகளை வளர்ப்பது காலத்தின் கட்டாய தேவை, கடற்தாவரங்கள், நிலம் வளமடைய நீர்வளம் வேண்டும், வடக்கிலுள்ள ஆற்று வாய்க்கால்கள், வீட்டுத் தோட்டம், இயற்கை வளம் நிறைந்திருந்த நெடுந்தீவு, அம்பாள் வீற்றிருந்து அருள் சுரக்கும் நயினாதீவு என இன்னோரன்ன பெரியதும் சிறியதுமான 40 கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71563).

ஏனைய பதிவுகள்