புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, சித்திரை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 112 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955- 4676-95-4. இந்நூலில் புலவொலி-புலோலியூரின் இலக்கிய கர்த்தாக்கள், சிறுகதை வளர்ச்சிக்கு துணைநின்ற சிறு சஞ்சிகைகள், தெணியான் பற்றிய ஒரு தரிசனம், தி. ஞானசேகரனின் “சரித்திரம் பேசும் சாஹித்திய ரத்னா” விருதாளர்கள் நூல் பற்றிய பார்வை, மலர்ந்த(ன) பஞ்ச புஷ்பங்கள்-கலாமணியின் நூல்கள் பற்றி, சுதாராஜின் “காட்டிலிருந்து வந்தவன்”, கண.மகேஸ்வரனின் கனதிமிக்க சிறுகதைகள், புதியவகை இலக்கியமாய் பரிணமிக்கும் நேர்காணல்கள்: பரணீதரனின் நூலை முன்னிறுத்தி, புலோலியூர் க.சதாசிவம் பற்றிய நெஞ்சம் உடைத்த நினைவுகள், நான் காணும் “தெளிவத்தை”, “கருத்தால் உடன்பிறந்த” கோகிலா மகேந்திரன், கொன்றைப் பூக்கள்: மண்டூர் அசோகா, “வன்னியாச்சி” தாமரைச்செல்வி, “அதிவேக எழுத்தாளர்” ச.முருகானந்தன், “(எங்கள்) குடும்பநல மருத்துவர்” எம்.கே.முருகானந்தன், சிதம்பரப்பிள்ளை மாஸ்டர்-சில நினைவுகள் ஆகிய 16 கட்டுரைகளை தெகுத்திருக்கின்றார். ஈழத்து இலக்கிய உலகில் எழுத்தாளராக, பதிப்பாளராக, ஊடக முகாமையாளராக நன்கறியப்பட்ட உன்னத ஆளுமை புலோலியூர் ஆ.இரத்தினவேலோன். சிறந்த பல சிறுகதைகளை ஈழத்து இலக்கியத்துக்கு வழங்கிய இவர் இதுவரை 104 நூல்களை கொழும்பு மீரா பதிப்பகத்தின்மூலம் வெளியிட்டுள்ளார். தனது பத்தி எழுத்துக்களின் ஊடாக ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை பலரும் அறியச்செய்தவர். அவற்றின் தேர்ந்த தொகுப்பே இந்நூலிலும் இடம்பெற்றுள்ளது. இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 121ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.
Ladbrokes Casino games & Details 2024
Posts How to redeem 100 percent free wagers which have Ladbrokes? Software help There are even devoted offers for communities to help you score, if