14871 மின்மினிகளால் ஒரு தோரணம்.

முல்லை முஸ்ரிபா. கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, ஏ 6, 2/1 என்.எச்.எஸ்.கலைமகள் வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 10: S & S Printers, 43, ஜயந்த வீரசேகர மாவத்தை). xv, 132 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-0280-05-6. ஆசிரியரின் கவிதைத்துறைசார்ந்த ஆர்வத்தின் மற்றுமொரு வெளிப்பாடு இந் நூலாகும். இந்நூல் ஈழத்துக் கவிதைப்புலம் சார்ந்த தேடலாக விரியும் ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியல் பேசும் கவிதை: ஒரு தசாப்த காலக் கவிதைக;டான ஆய்வு முன்வைப்பு, வடக்கு முஸ்லிம் எழுத்து: வடிவங்களைத் தேடும் வாழ்வு, நான்கு தசாப்தங்களில் இலக்கியப் பரிமாணம்: அல் ஹஸனாத் சஞ்சிகையின் இலக்கியக் கூறுகளை முன்வைத்து ஓர் ஆய்வுக் குறிப்பு, கண்ணின் மணியொப்பும் இருமணிகள்: பண்டிதமணி கணபதிப்பிள்ளை புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஒப்பீட்டு நோக்கு, நவீன கதைகளை உள்ளீர்த்தல்: தமிழ் மொழியும் இலக்கியமும் பாட நூல்களை முன்வைத்து சில குறிப்புகள், பாரசீகச் சிரிப்பு: அர்த்தமும் அலாதியும், ஒரு கவிதை ஒரு குறிப்பு: வானொலிக் கவிதை வாசிப்பு, மூன்று கவிதைப் பிரதிகளுக்கான அணிந்துரை: கவிதையின் செழுமைத் தேடல், மின்மினிகளால் ஒரு தோரணம்: ஹைக்கூ கவிதைகளின் லாவகம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14644 மனப் பூக்கள்(கவிதைத் தொகுதி).

செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: திருமதி விஜயலட்சுமி திருநாவுக்கரசு, 15, பண்டாரக் குளம் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 2018. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). ix, 95 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

14901 சித்தாந்தபாநு சோ.சுப்பிரமணியக் குருக்கள் பாராட்டுவிழா மலர்.

ச.பஞ்சாட்சர சர்மா (மலர் ஆசிரியர்). கோப்பாய்: குருக்கள் பாராட்டுவிழாச் சபை, 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). (10), 84 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,