14873 எனது பேனாவில் இருந்து.

கரவை மு.தயாளன். லண்டன்: T.G.L.வெளியீடு, 1வது பதிப்பு, ஜுன் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 239 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ., ISBN: 978-0- 9935325-8-0. அரசியலோடு இணைந்த சமூக வெளிப்பாடும் சமூகத்தோடிணைந்த படைப்புகளின் வெளிக்கொணர்வும் இத்தொகுப்பின் உயிர்நாடி எனக் கொள்ளலாம். உலகம் பிரசவித்த பல தத்துவங்களின் உள்வாங்கல் இத்தொகுப்பின் படைப்புகளில் பிரதிபலிக்கின்றன. இத்தொகுப்பில் தோற்றது தாய்மை, அம்மாக்களும் பிள்ளைகளும், லண்டன் நகரத்து வீதிகளில், ஜெர்மானிய வீடுகளில், பாவம் கனகா, என்னை மறந்ததேன் ஆகிய ஆறு சிறுகதைகளும், திருவருளின் திருநீறு, சமயமும் சம்பவங்களும்-1, உன்னதங்கள், நாதனை மறைத்திடும் நவக்கிரகங்கள், சமயமும் சம்பவங்களும்-2, பரிணாமம், உலகெலாம் உணர்ந்து ஆகிய ஏழு கட்டுரைகளும், ஓ என் இனிய தமிழே, நீ எப்போது என்னுள் வந்தாய்?, வேரோடு நாம் பெயர்ந்தோம், ஏன் தமிழே, சேகுவேரா, விடுதலைக் கனவு, மணலாகிப் போனேன், இன்னுமா உனக்குப் புரியவில்லை, இத்தனைக்குப் பின்னும் ஆகிய ஒன்பது கவிதைகளும், தமிழ் படும் பாடு, பாஞ்சாலி சபதம் ஆகிய இரு நாடகங்களும், டுழடெiநௌளஇ ஐனநவெவைலஇ சுநகடநஉவழைn ஆகிய மூன்று ஆங்கிலச் சிறுகதைகளும், இறுதியில் பதினொரு ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12477 – தமிழ்மொழித் தின விழா மலர் 1996:

சிறப்பு மலர். க.ந.ஜெயசிவதாசன் (இதழாசிரியர்), இ.சண்முகசர்மா (அமைப்பாளர்). கொழும்பு: தமிழ் மொழிப் பிரிவு, கொழும்பு கல்வி வலயம், கல்வி உயர்கல்வி அமைச்சு, இசுரபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, ஜுன் 1996. (கொழும்பு 12: கவிதா

12490 – நவரசம் 2016.

என்.கே.அபிஷேக்பரன், எஸ்.சஜிஷ்னவன் (மலராசிரியர்கள்). கொழும்பு: ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 186 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12373 – கலாசுரபி: தூண்டல்-02, துலங்கல்-13.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). ix, 171 பக்கம், 12 புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5

14016 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 57வது ஆண்டுப் ; பொது அறிக்கை (1998-1999).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: ஆட்சிக் குழு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு-13: எம்.ஜி.எம். பிரிண்டிங் வேர்க்ஸ், 102/2, Wolfendhal