மனோ சிவசுப்பிரமணியம், சிவா கிருஷ்ணமூர்த்தி. கொழும்பு 4: சிவா கிருஷ்ணமூர்த்தி, கொழும்பு இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (கொழும்பு 06: பரணன் அசோஷியேட்ஸ், 403, 1/1, காலி வீதி). (6), 140 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×13.5 சமீ. புவி, புவியின் அமைப்பு, இலங்கை, இலங்கையின் நிலத்தோற்றம், காலநில வலயங்கள், மண்ணும் மண் வகைகளும், இயற்கைத் தாவரங்கள், இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் (விவசாயம், மீன்பிடி), பான வகை (தேயிலை), எற்றுமதிப் பயிர்கள் (இறப்பர், தென்னை), தோட்ட உற்பத்திகள் (காய்கறி, கோழி வளர்ப்பு), இலங்கையின் கைத்தொழில்கள், பிரதான கைத்தொழில் (சுரங்கம் அறுக்கும் கைத்தொழில், உற்பத்திக் கைத்தொழில், சேவைக் கைத்தொழில்), இலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்கள், மகாவலி அபிவிருத்தித் திட்டம், தென் இலங்கை அபிவிருத்தித் திட்டம், இலங்கையின் சூழல் பிரச்சினைகள், சூழல் பாதுகாப்பு, பௌதிக அம்சங்கள், கழிமுகம், வெள்ளச் சமவெளி, மேட்டுநிலம், மலை, சமவெளி, பொங்குமுகம், நீர் வடிகால் முறையும் ஆற்றுத் தொகுதிகளும், பாறைகளும் மண்ணும், காலநிலை, இயற்கைத் தாவரம், உலகின் பொருளாதார நடவடிக்கைகள், கைத்தொழில்கள், சனத்தொகை, அண்மைக்கால போக்குகள், பிரச்சினைகள், தீர்வுகள், செய்முறைப் புவியியல் ஆகிய பாடங்கள் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இறுதியில் 2001ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சை வினாத்தாள் இணைக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23729).