எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப். புத்தளம்: புத்தளம் தமிழ்மொழி எழுத்தாளர் சங்கம், இல. 19, மௌலவி புவாட் (Fuard) ஒழுங்கை, 14வது ஒழுங்கை, மரிக்கார் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2015. (புத்தளம்: மில்கொம் சிஸ்டம், இல. 01, ஜனசவிய கொம்பிளெக்ஸ், குருநாகலை வீதி). 67 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4535-01-5. புதிதாக ஹஜ், உம்றா புனிதப் பயணங்களை மேற்கொள்ளத் தயாராகவுள்ள இஸ்லாமியருக்கு ஆசிரியரின் அனுபவபூர்வமான ஆலோசனைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. கடவுச்சீட்டு தவறியதால், ஹறம்களின் வாசல் தவறியதால், அல்லாஹ் நிரப்பமாகத் தந்துள்ளதால், லிப்ட் பயணங்களின் போது, பதவிச் செருக்கினால், ஒவ்வா வார்த்தைகளால், அடையாளத்தை எடுத்துச் செல்லாமையால், அறிவுரைகளை அலட்சியம் செய்ததால், சமையல் பிரச்சினைகள், மஹ்ஷரின் ஒரு துளியின் துளியை மினாவில் கண்டோம், நாவைப் பேணுகநபிமொழிகள் ஆகிய பதினொரு அத்தியாயங்களில் புனித யாத்திரையின்போது அவதானித்துக் கைக்கொள்ளவேண்டிய நடைமுறைகள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப் சமூகக் கல்வி, வரலாறு பாடங்களுக்கான ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65127).