மகவம் கலைவட்டம் (தொகுப்பாசிரியர்கள்). கோண்டாவில்: ஊரெழு, க.வை.தனேஸ்வரன் நினைவுக் குழு, மகவம் கலை வட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 2005. (கொழும்பு: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ், திலக பிரஸ், 257, டாம் வீதி). viii, 82 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ. அமரத்துவம் அடைந்த திரு.க.வை. தனேஸ்வரன் (04.12.1932-26.12.2004) அவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட நினைவஞ்சலிகள், அஞ்சலிப்பாக்கள் ஆகியவற்றின் தொகுப்பு. உடன் பிறப்புக்களின் உள்ளக் குமுறல்கள் உயிர் உள்ளவரையும் எங்களுக்கு அண்ணாவே (கவிஞர் வி.கந்தவனம்), இவனும் ஒரு எட்டயபுரத்தான், கடல் வந்து முத்தெடுத்த கதை இது, அறிவிப்புக்கலை உலகில் அரை நூற்றாண்டு கோலோச்சிய கோமகன் (வேல் அமுதன்), நீங்கா நினைவலைகள் (அநு.வை.நாகராஜன்), கண்களை மூடித் தேடுகிறோம், ஆத்மா அழிவதில்லை, காற்றுடன் கலந்த கலங்கரை விளக்கு க.வை. தனேஸ்வரன் ஊரெழு அழகிய சிற்றூர் (ஆக்கம்- க.வை.தனேஸ்வரன்), நிமிர்ந்த நெஞ்சுடையார் (சோ.தேவராஜா), நெஞ்சக் கோவில் (கவிஞர் மாவை வரோதயன்), திரு.க.வை.தனேஸ்வரன் (சி.தங்கராசா குடும்பம்), Kandiah Vaithilingam Thaneswaran, என் நினைவலைகளில் தனேஸ்வரன் மாஸ்டர் (அ.கனகசூரியர்), நினைவுகளில் நிலைத்து நிற்கும் க.வை.த (செ.சக்திதரன்), உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய் (லோகதாசன் குடும்பத்தினர்), நெஞ்சில் நிறைந்த அந்த இனிய நாட்கள் (க.தெய்வகுலரத்தினம்), திரு.க.வை. தனேஸ்வரன் நினைவிலிருந்து ஓர் குறிப்பு (செ.நரேந்திரன்), பேச்சுக் கலையின் விந்தை, கலைதுறை நாயகன் க.வை.தனேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலி (த.சிவதரன்), மாந்தருக்குள் மாசற்ற மாணிக்கமே மறைந்து விட்டீரா (அ.தம்பித்துரை), யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களின் அனுதாபச் செய்தி, உலகை நேசித்த உத்தமன் (கம்பவாரிதி இ.ஜெயராஜ்), ஒளியாக நிற்கும் என் குரு (சண்முகலிங்கம்), அரசாங்க அதிபர் சிந்தனையிலிரேந்து (செ.பத்மநாதன்), எங்கள் குடும்ப நண்பர் (திருமதி. மகேஸ்வரி கதிரவேலு) ஆகிய ஆக்கங்களை இம்மலர் உள்ளடக்கியுள்ளது.