14900 இணுவில் பெரிய சந்நியாசியாரின் வாழ்வும் வளமும்.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: கலாபூஷணம் மூ.சிவலிங்கம், இணுவில், 1வது பதிப்பு, ஆடி 2018. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). viii, 56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ. இணுவிலில் வாழ்ந்து மறைந்த சிவசுப்பிரமணியம் என்ற பெரிய சந்நியாசியாரின் நினைவாக அவர் சமாதிநிலையடைந்த 101ஆவது ஆண்டு நிறைவின்போது அங்கு கட்டப்பெற்ற புதிய மண்டபத்தில் நடந்த விழாவில் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் சீர்மிகு இணுவைத் திருவூர், பெரிய சந்நியாசியாரின் அவதாரம், மந்தை மேய்க்கும் மாண்புமிகு பணி, மாரியம்பாள் தந்த மதிய உணவு, சிவசுப்பிரமணியம் சித்தரானார், காரைக்கால் பதியின் அபிவிருத்தியில் பெரிய சந்நியாசியார், அன்னதானப் பணியின் தோற்றம், காரைக்கால் திருப்பதியில் 1008 மரம் நடுகை, ஏழு நீர்நிலைகள், பெரிய சந்நியாசியாரின் ஏனைய ஆலயப் பணிகள், இணுவில் பெருமஞ்சம் அமைக்கும் சிந்தனை, திருமஞ்சம் அமைத்தல், திருமஞ்சப் பணியின் இடமாற்றம், பெரிய சந்நியாசியாரின் கலை ஆர்வமும் கலைச் சிறப்புகளும், திருப்பெருமஞ்ச அமைப்பின் தோற்றம், உலகப் பெருமஞ்ச வெள்ளோட்டம், இணுவில் கந்தசுவாமி கோவிலிலிருந்து காரைக்காலுக்கு ஏழு தேர்ப்பவனி, சூரன்போர் (காரைக்காலில்), பெரிய சந்நியாசியாரின் அற்புதங்கள், பெரிய சந்நியாசியாரின் திருவாக்கும் அடித்தொண்டர்களின் நற்பேறும், பெரிய சந்நியாசியாரின் சமாதிக்காலம், பெரிய சந்நியாசியாரின் சமாதி நிறுவிய பின் நிகழ்ந்த சிறப்புகள், நிறைவாக ஆகிய 23 தலைப்புகளின் கீழ் இணுவில் பெரிய சந்நியாசியாரின் வாழ்வும் பணிகளும் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63614).

ஏனைய பதிவுகள்