ஏ.எம். நஹியா. கொழும்பு: அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xxiv, 336 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 950., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-38131-0-7. ஷாபியைப் புரிந்துகொள்ளல், அளுத்கம ஸாஹிறாவின் சிற்பி, கொழும்பு ஸாஹிறாவின் மீள் நிர்மாணம், கொழும்பு ஸாஹிறாவின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கொழும்பு ஸாஹிறாவின் இரு வரலாற்றுப் பதிவுகள், ஒறாபிபாஷா ஞாபகார்த்தம், ஜாயா நினைவும் நிதியமும், முஸ்லிம் கல்வி மாநாட்டின் உயிர்நாடி, முஸ்லிம் கல்வி, சமயக் கல்வியின் காவலன், அரபு மொழி மேம்பாடு, பல்கலைக்கழகக் கல்வியில் அக்கறை, யூனானி வைத்தியத்துறையில் கரிசனை, கல்விக் கருத்தும் சிந்தனையும், தொழிற்கல்வி, எல்லோருக்கும் கல்வி, சுயாதீன தனியார் பாடசாலைகள், மொழிக் கொள்கை, தேசிய கல்விப் பணி, ஷாபியின் அரசியலும் முஸ்லிம் கல்வியும், நிறைவுரை ஆகிய 21 இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64494).