சரோ வர்ணன். கனடா: சரோ வர்ணன், டொரன்ரோ, 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough). 130 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் முன்னாள் அதிபரும் தமிழ் அறிஞருமான கனகசபாபதி அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிய நூல். திரு. பொன்னையா கனகசபாபதி அவர்கள் மகாஜனாக் கல்லூரியில் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். முன்னர் ஏழாலை மத்திய மகாவித்தியாலயத்திலும், புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியிலும் அதிபராகக் கடமையாற்றியிருந்தார். அதன் பின் நைஜீரியாவில் கடமையாற்றி விட்டு அங்கிருந்து 1987 இல் கனடா வந்த இவர் 1988ஆம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து 2014 மார்கழியில் அங்கு அமரத்துவமடைந்தார். இந்நூல் அவரது மறைவிற்கு நான்காண்டுகளுக்கு முன்னர் அவரது பவள விழாவையொட்டி வெளியிடப்பட்டிருந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 225678).