என்.சண்முகலிங்கன். தெல்லிப்பழை: நாகலிங்கம் நூலாலயம், நகுலகிரி, மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி). v, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. 1988இல் தன் தந்தையின் (அமரர் நாகலிங்கம்) மறைவின்போது “என் அப்பாவின் கதை” என்ற நூலையும், 2004இல் தன்தாயின் (திருமதி நகுலேஸ்வரி நாகலிங்கம்) மறைவின் போது “என் அம்மாவின் கதை” என்ற நூலினையும் எழுதியவர் என். சண்முகலிங்கன். 2014இல் தன்சகோதரியின் பிரிவின்போது “என் அக்காவின் கதை” என்ற இந்நூலை எழுதியுள்ளார். அக்கா என்ற ஆளுமையின் வகிபாகத்தையும் தன் வரலாற்றுடன் இணைத்து கலைப்பெறுமானச் செறிவுடன் இந்நூலைத் தன் அக்காவின் கதையாக (பேராசிரியை திருமதி மனோ சபாரத்தினம்) எழுதியுள்ளார். கல்வெட்டுப் பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியாக இந்நூல் அமைகின்றது. நாகலிங்கம் நூலாலயத்தின் பன்னிரண்டாவது நூலாக இது வெளியிடப்பட்டுள்ளது.