மலர்க் குழு. மட்டக்களப்பு: பேராசிரியர் செ.யோகராசா பணிநயப்பு விழாச்சபை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரின்டர்ஸ், 496ஏ, திருமலை வீதி). 258 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் செ.யோகராசாவின் பணிநயப்பு விழா சிறப்பு மலராக உதித்திருக்கிறது கருணையோகம். கல்வி, இலக்கியம், ஆய்வு என விரிந்திருந்த பேராசிரியரின் திறன் வீச்சுக்களையெல்லாம் ஒவ்வொரு வரிகளிலும் அள்ளியெடுத்து வந்திருக்கிறது. பதிப்புரை, ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், தலைவரின் செய்தி, மனப்பதிவுகள், கட்டுரைகள், செவ்வி, பேராசிரியரின் ஆக்கங்களும் அவர் பற்றிய ஆக்கமும் ஆகிய பிரிவுகளில் இம்மலர் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்கில் பிறந்து, மலையகத்தில் வசித்து, கிழக்கில் பணிசெய்த ஒரு கல்வியியலாளரின் வாழ்வும் பணிகளும் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மலர்க்குழு உறுப்பினர்களாக றூபி வலன்ரீனா பிரான்சிஸ், வி.மைக்கல் கொலின், ஓ.கே.குணநாதன், சு.முரளிதரன், சோலைக்கிளி, மேமன்கவி, சு.ஜெயச்சந்திரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.