பொன்.பாக்கியம். வட்டுக்கோட்டை: வட்டுக்கோட்டை தமிழ்ச் சங்கம், பண்ணாகம், சுழிபுரம், 1வது பதிப்பு, ஜுலை 1970. (யாழ்ப்பாணம்: சுசீலாதேவி அச்சகம், சித்தன்கேணி). 113 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 2.50, அளவு: 22×14 சமீ. ஆறுமுக நாவலரின் வரலாற்றை இரு பெரும் பிரிவுகளாக விளக்கும் இந்நூலில் “சரித்திரம்”, “ஆராய்ச்சி” ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அத்தியாயங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. “சரித்திரம்” என்ற பிரிவின் கீழ் பிறப்பு, தோற்றம், கல்வி, விசேட சம்பவம் ஒன்று, கற்றவிதம், கல்வி வளர்ச்சி, ஆங்கிலப் படிப்பு, பைபிள் மொழிபெயர்ப்பு, உத்தியோக பரித்தியாகம், பதினான்கு வருசத்தின் பரமரகசியம், கற்பவை கற்றமை, கற்பித்தல், கற்பித்த நோக்கம், சைவப் பிரசங்கம், 1848ஆம் ஆண்டு, புத்தகம், அச்சுக்கூடத்துக்குப் போனவர் ஆறுமுக நாவலரானார், அச்சுக்கூடம், பத்து வருட சேவை, அச்சுக்கூடத்தில் ஒரு விசேடம், 31ஆம் வயசில் ஒரு பெருங் கிளர்ச்சி, ஆனந்த வருடத்தில் ஓர் அமைதி, நான்காவது பிரயாணம், வழியில், சென்னையில், தேவர் சந்திப்பு, மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் பாயிரம், விக்கியாபனம், திருவண்ணாமலை ஆதீனத்தில், திருவாவடுதுறையில், மூலதனம், வைதிக சைவம், ஐந்தாவது பிரயாணம், யாழ்ப்பாணத்தில், சீர்திருத்தம், உத்தம மாணவர், நல்லூர்த் திருத்தம், பிற வேலை, நல்லூர்ப் பிரசங்கம், திருக்கூட்டச் சிறப்பு, ஆட்டுக் கொலை, மூன்று பத்திரிகை, மற்றைக் கருமம், பஞ்ச நிவாரணம், மிகுதி, துவைனம், புலோலியில், கண்ணகி, பிரசங்க பூர்த்தி, சிவபதப் பேறு ஆகிய 50 அத்தியாயங்கள் உள்ளன. “ஆராய்ச்சி” என்ற பிரிவில் சரித்திரம், யாழ்ப்பாணம், தவம், பாண்டிமழவர்குடி, ஞானப்பிரகாசர், இலங்கை காவல முதலியார், பரமானந்தர், கந்தர், நாவலர், ஆங்கில அரசு, அகநோய், கிறிஸ்த சூழல், கல்வி, கற்பவை, நோக்கும் நிலைக்களமும், நிலைக்கள சுத்தி, நீதி, பிரசங்கம், புராணபடனம், கற்பித்தல், மாணவர் பரம்பரை, வித்தியாசாலை, புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், கண்டனங்கள், பாஷை நடை, வழக்குகள், துவைனத்தை வழக்கு வைக்கும்படி நெருக்கடி செய்தது, சேர் முத்துக்குமாரசுவாமி, துணிவு, தியாகம், அச்சமின்மை, நாவலர் சுவாதீனபதி, வரிசை, நிந்தியாதவர்- நீதிமான், பஞ்சமும் நோயும், சூழல், வெகுசனவிரோதி, தர்மமும் கணக்கு வைத்தலும், நாவலர் அயாசகர், வள்ளல், டைக்கும் நாவலரும், நாவலரும் துவைனமும், சீர்திருத்தங்கள், திட்டங்கள், தமிழ்ப் புலமை (பாடத் திட்டம்), சைவசமயி, அநாசாரம், திருக்கோயிலிலும் திருவீதியிலும் செய்யத்தகாத குற்றங்கள், நாவலர் காலத்துப் புலவோர், விசாகப் பெருமாளையர், வேகத்தணிவு, தீர்ப்பு ஆகிய 54 அத்தியாயங்கள் உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25135).