க.செபரத்தினம். கொழும்பு 2: கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம், 101/70, கியூ வீதி, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 2: ராஜன் அச்சகம், 31, கியூ லேன்). (10), 72 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 21.5×14 சமீ. இந்நூலில் விபுலாநந்த அடிகளாரின் பிறப்பிடமான மட்டக்களப்பின் வரலாற்றுச் சுருக்கமும் அவர் காலப் பின்னணியும், விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கைச் சுருக்கம், அடிகளாரின் கல்விச் சிறப்பு, பள்ளிக்கூடங்கள் நிறுவிய பணி, சிவானந்த வித்தியாலயச் சிறப்புப் பணி, ஆசிரியர் பணி, பத்திரிகை ஆசிரியர் பணி, கலைச்சொல்லாக்கப் பணி, பல்கலைக்கழகப் பணி, அடிகளாரின் கல்விச் சிந்தனைகள், முடிவுரை, ஒரே பார்வையில் அடிகளாரது வாழ்க்கைக் குறிப்புகள், உசாத்துணை நூல்கள் ஆகிய 13 பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16959).