த.நீதிராஜா குடும்பத்தினர். கொழும்பு 13: த.நீதிராஜா, 89 புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கொழும்பு 12: லீலா அச்சகம், சின்னத்துரை பில்டிங், 182, மெசெஞ்சர் வீதி). (6), 88 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப் படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ. பிரபல வர்த்தகர் அமரர் தம்பிமுத்து நீதிராஜா அவர்களன் மறைவையொட்டி 11.4.1998 அன்று வெளியிடப்பட்ட நினைவு மலர். இம் மலரில், நீதியின் நினைவு, அனைவர்க்கும் அனையாத கலங்கரை விளக்கம், பொன் போல ஒளிரத் துணை நின்றோன், தாத்தாவின் அன்பு மழை, தோத்திரப் பாக்கள், அபிராமி அந்தாதி, மஞ்சவனப்பதி முருகன் ஆலய நிர்வாக சபை,, அமரர் தம்பிமுத்து நீதிராசா அவர்களின் மறைவையொட்டி அவர்களின் குடும்பத்தவர்களினால் வெளியிடும் நினைவு மலருக்கு கதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயதர்மகர்த்தாசபை சமர்பிக்கும் இரங்கல் செய்தி, திரு.தம்பிமுத்து நீதிராஜா அவர்கள் (க.விவேகானந்தன்), ஆடிய ஆன்மா அடங்கிய போது ஆடுகின்ற ஆன்மாவின் ஆன்மமொழி, இவர் புகழ் வாழ்க, ஓம் ஸ்ரீசாயிராம், மூல மந்திரம், பங்காரு அடிகளார் போற்றி மந்திரம் நூற்றியெட்டு, நூற்றியெட்டு போற்றி மந்திரம், வேண்டுதற் கூறு, வாழ்த்து, ஓம் சக்தியெ 108 போற்றித் திருவுரு, ஆதிபராசக்தி அன்னை – சரணம், ஓம் சக்தி, ஓம் சக்தி அன்னையின் அருள் மொழிகள், சுவாமி ஆத்மகணானந்தாவின் செய்தி, எமது அஞ்சலி, யு.ர்.ஆ.பௌஸி அவர்களின் இரங்கல் செய்தி, உள்ளம் கவர்ந்த உத்தமர் (பொ.கமலநாதன்), கொடைப் பெருங்கால் எம் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட அமரர் தம்பிமுத்து நீதிராசா (சோ.தி.கிருஷ்ணகுமார்), திரு.டி.நீதிராஜா (க.கேதீஸ்வரன்), நிறைவான வாழ்வு (மு.சிவசிதம்பரம்), எஸ்.சர்வானந்தா இரங்கலுரை, செனெட்டர் நீதிராஜா (நீதவான் கெ.பாலகிட்னர்), நீதியரை மறக்க முடியுமா (ஆர்.சிவகுருநாதன்),ஆத்ம சாந்தி இரங்கலுரை (சி.தனபாலா), வரலாறு படைத்த வள்ளலார் கொக்குவில் தந்த தவப்புதல்வன் அமரர் தம்பி முத்து நீதிராஜா (தம்பு மாணிக்கவாசகர்), நீதியர் புகழே வாழ்க, திரு.த.நீதிராசா சமாதான நீதிவான் உப-தலைவர் விவேகானந்த சபை, இந்து மக்களின் பேரிழப்பு (கந்தையா நீலகண்டன்), சைவ அபரக் கிரியை இயல், மரணச்சடங்கு சூர்ணோத்சவம், அஸ்தி சஞ்சயன – காடாற்று – சாம்பல் அள்ளல், சுவாமி விவேகானந்தர், நாள் தோறும் அடியிற் குறித்த நேரங்களில் இவைகளை ஓதிப் பயன் பெறுங்கள் ஆகிய தலைப்புகளில் பக்தி இலக்கியங்களும், இரங்கல் உரைகளும், கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24141).