15497 உனக்கான பாடல்.

எஸ்.ரபீக். அக்கரைப்பற்று: எஸ்.ரபீக், 145, பட்டியடிப்பிட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்).

60 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 12×17 சமீ.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.ரபீக்கின் முதலாவது கவிதைத் தொகுதி இது. தமது நிறைவேறாக் காதல் தொடர்பாகத் தனது முன்னாள் காதலியை நோக்கி எழுதப்பட்ட ஒரு காதலனின் உணர்வுபூர்வமான 52 கவிதைகளின் தொகுப்பு. காதல் தோல்வியை விரக்தியாக எழுதாமல் புதுமையான படிமங்கள் மூலம் தன்னுணர்ச்சிப் பாடல்களாகத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

12191 – மனிதனின் கௌரவப் பெயர்.

M.S.M.முபாறக் (புனைபெயர்: மருதவாசி). மருதமுனை-3: மக்காமின் அமீன் பப்ளிக்கேஷன்ஸ், ஹிஜ்றா வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2005. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). (2), 129 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5