14948 அகஸ்தியர் என்ற எங்கள் பப்பா 1926-1995.

நினைவு மலர் வெளியீட்டுக் குழு. பாரிஸ்: திருமதி நவமணி அகஸ்தியர், இல. 9, சுரந புயடடநசழnஇ 75020, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. 06.01.1996 அன்று வெளியிடப்பெற்ற இம்மலரின் முதல் ஒன்பது பக்கங்களில் அமரர் அகஸ்தியரின் வாழ்க்கைச் சுருக்கம் இடம்பெற்றுள்ளது. தொடரும் பக்கங்களில் நவமணி அகஸ்தியர், நவஜோதி ஜோகரட்ணம், சுஜீ நவஜீவா, யன்னிக்ராஜ், நவஜெகனி ராஜதாசன், எஸ்.பி.ஜேசுரட்ணம், ந.கமலினி ஆகியோரின் குடும்பத் தலைவருக்கான அஞ்சலியுரைகள் இடம்பெறுகின்றன. அகஸ்தியர் நவஜீவா, கீழ்க்கரவைப் பொன்னையன், அருந்ததி, இ.உக்கிரப் பெருவழுதி ஆகியோரின் அஞ்சலிக் கவிதைகளும் இம்மலருக்கு அணிசேர்க்கின்றன. நூலின் நிறைவாக அகஸ்தியர் எழுதி 1970-தாமரை இதழில் பிரசுரமான ‘தனியொருவனுக்கு” என்ற சிறு கதையும், ச.சச்சிதானந்தம் (எழுத்தை ஆழும் அகஸ்தியரும் நானும்), மனோ-ஓசை (மரியாதைக்குரிய அகஸ்தியர் ஐயா அவர்களோடு), சி.சிவசேகரம் (முதுபெரும் முற்போக்கு எழுத்தாளர்) ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 25263).

ஏனைய பதிவுகள்

12177 – முருகன் பாடல்: பதினொன்றாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

14320 நீதிமுரசு 2000.

ஐ.பயஸ் றெஸ்ஸாக் (மலராசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (கொழும்பு 6: பரணன் அசோஷியேட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 403, 1/1

14168 மாவடியான் திரு: மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்-2010.

கனகலிங்கம் சோமசேகரம் (தொகுப்பாசிரியர்). மீசாலை: தர்மகர்த்தா சபை, மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xxxii, 300 பக்கம், விளக்கப்படங்கள்,

14822 அசையாத மலைத்தொடர்.

கமல் பெரேரா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).