நினைவு மலர் வெளியீட்டுக் குழு. பாரிஸ்: திருமதி நவமணி அகஸ்தியர், இல. 9, சுரந புயடடநசழnஇ 75020, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. 06.01.1996 அன்று வெளியிடப்பெற்ற இம்மலரின் முதல் ஒன்பது பக்கங்களில் அமரர் அகஸ்தியரின் வாழ்க்கைச் சுருக்கம் இடம்பெற்றுள்ளது. தொடரும் பக்கங்களில் நவமணி அகஸ்தியர், நவஜோதி ஜோகரட்ணம், சுஜீ நவஜீவா, யன்னிக்ராஜ், நவஜெகனி ராஜதாசன், எஸ்.பி.ஜேசுரட்ணம், ந.கமலினி ஆகியோரின் குடும்பத் தலைவருக்கான அஞ்சலியுரைகள் இடம்பெறுகின்றன. அகஸ்தியர் நவஜீவா, கீழ்க்கரவைப் பொன்னையன், அருந்ததி, இ.உக்கிரப் பெருவழுதி ஆகியோரின் அஞ்சலிக் கவிதைகளும் இம்மலருக்கு அணிசேர்க்கின்றன. நூலின் நிறைவாக அகஸ்தியர் எழுதி 1970-தாமரை இதழில் பிரசுரமான ‘தனியொருவனுக்கு” என்ற சிறு கதையும், ச.சச்சிதானந்தம் (எழுத்தை ஆழும் அகஸ்தியரும் நானும்), மனோ-ஓசை (மரியாதைக்குரிய அகஸ்தியர் ஐயா அவர்களோடு), சி.சிவசேகரம் (முதுபெரும் முற்போக்கு எழுத்தாளர்) ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 25263).