14951ஒளிரும் நட்சத்திரங்கள்: கலை இலக்கிய ஆளுமைகள் குறித்த பதிவுகள்.

க.பரணீதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 162 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0958-20-7. 928 இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் நூல் தேட்டம் – தொகுதி 15 547 ஈழத்தில் ஒளிர்ந்து மறைந்தவர்களாகவும், ஒளிர்ந்து கொண்டிருப்பவர்களுமான ஆளுமைமிக்க நட்சத்திரங்களாக ஆசிரியரால் இனம் காணப்பட்ட 20 ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் இவை. முன்னர் தமிழர் தளம், படிகள், ஜீவநதி ஆகிய ஊடகங்களில் வெளியானவை. இதில் இ.சு.முரளிதரன், சி.ரமேஷ், கே.ஆர். டேவிட், க.திலகநாதன், அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின், மலரன்னை, கொற்றை பி.கிருஷ்ணானந்தன், அலெக்ஸ் பரந்தாமன், மு.அநாதரட்சகன், அன்புடீன், செல்லக்குட்டி கணேசன், எம்.எஸ்.அமானுல்லா, கெக்கிறாவ ஸஹானா, இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், த.சிவசுப்பிரமணியம், இராஜினிதேவி சிவலிங்கம், கண.மகேஸ்வரன், நாடகவியலாளர் பா.இரகுவரன், கெகிறாவ ஸ{லைஹா, புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் ஆகிய இருபது கலை இலக்கியவாதிகள் பற்றிய வாழ்வும் பணியும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஜீவநதி, கடல் ஆகிய இதழ்களின் ஆசிரியரான பரணீதரன், படைப்பாளியாக, சஞ்சிகை ஆசிரியராக, பதிப்பாளராக, இசை-நாடக நடிகராக எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 132ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

12583 – விஞ்ஞான போதினி: 7ஆம் 8ஆம் வகுப்புகளுக்குரியது.

ம.பரமானந்தன், நா.சா.இரத்தினசிங்கம். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 3வது திருத்திய பதிப்பு, 1964, 1வது பதிப்பு, 1959, 2வது பதிப்பு, 1961. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xii, 551 பக்கம், விலை: ரூபா

12055 – சைவக் கிரியைகளும் விரதங்களும்.

தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை: செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாள் அறநிதியம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 2வது பதிப்பு, ஜனவரி 1991, 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 52 பக்கம்,

14885 கேரள டயரீஸ்-1: வேர் தேடுவோம்.

அருளினியன். சென்னை: Stoicdale Publishers, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சென்னை 600042: ஜீவா பதிப்பகம், வேளாச்சேரி). 162 பக்கம், விலை: ரூபா 450., இந்திய ரூபா 230., அளவு: 22×14.5 சமீ. யாழ்ப்பாணம்,

14073 பசுவின் கதை.

காந்தளகம். யாழ்ப்பாணம்: காந்தளகம், 213, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, தை 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், காங்கேசன்துறை வீதி). viii, 15 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. இந்நூல் காலயுத்தி

14433 அரசகரும மொழிகள் தேர்ச்சி மட்டம் 2: தமிழ்.

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத்