க.பரணீதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 162 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0958-20-7. 928 இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் நூல் தேட்டம் – தொகுதி 15 547 ஈழத்தில் ஒளிர்ந்து மறைந்தவர்களாகவும், ஒளிர்ந்து கொண்டிருப்பவர்களுமான ஆளுமைமிக்க நட்சத்திரங்களாக ஆசிரியரால் இனம் காணப்பட்ட 20 ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் இவை. முன்னர் தமிழர் தளம், படிகள், ஜீவநதி ஆகிய ஊடகங்களில் வெளியானவை. இதில் இ.சு.முரளிதரன், சி.ரமேஷ், கே.ஆர். டேவிட், க.திலகநாதன், அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின், மலரன்னை, கொற்றை பி.கிருஷ்ணானந்தன், அலெக்ஸ் பரந்தாமன், மு.அநாதரட்சகன், அன்புடீன், செல்லக்குட்டி கணேசன், எம்.எஸ்.அமானுல்லா, கெக்கிறாவ ஸஹானா, இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், த.சிவசுப்பிரமணியம், இராஜினிதேவி சிவலிங்கம், கண.மகேஸ்வரன், நாடகவியலாளர் பா.இரகுவரன், கெகிறாவ ஸ{லைஹா, புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் ஆகிய இருபது கலை இலக்கியவாதிகள் பற்றிய வாழ்வும் பணியும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஜீவநதி, கடல் ஆகிய இதழ்களின் ஆசிரியரான பரணீதரன், படைப்பாளியாக, சஞ்சிகை ஆசிரியராக, பதிப்பாளராக, இசை-நாடக நடிகராக எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 132ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.