பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (16), 17-54 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18ஒ12 சமீ., ISBN: 978-0-9919755-3-2. பூம்புகார் இன்றுவரை கொண்டாடப்படும் தமிழ் சினிமாவின் அற்புத படைப்பு. தனக்கான தமிழை தமிழ்ச் சினிமாவின் முற்போக்கு முகமாக காட்டிய பெருமையும் கலைஞருக்கு உரியது. மறக்க முடியுமா என காகித ஓடம் பாடியது கலைஞர் கைகள். மந்திரி குமாரியில் மகுடம் சூடி, மனோகராவில் மணி மகுடமாய் ஜொலித்தது அவர் எழுத்து. நீதிக்குத் தண்டனை என வெகுண்டெழுந்து மண்டியிடும் மண்ணாங்கட்டி அரசியலை புடம்போட்டுத் தந்தது அந்த திரைப்படம். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனக்கான ஒரு மொழியை கட்டமைத்துக் கொண்டவர் கலைஞர். கலைஞர் கருணாநிதி பற்றிய தனது பார்வையினை கலைஞரும் நானும், கலைஞர் தமிழ், காலம் தோறும் கலைஞர், ஈழமும் கலைஞரும், ஈழ நிலமும் கலைஞரும், கலைஞர் நினைவிடம் ஆகி ஆறு இயல்களில் பால.சுகுமார் பதிவுசெய்திருக்கிறார். திருக்கோணமலை மாவட்டத்தின் சேனையூர் கிராமத்தில் பிறந்தவர் பாலசிங்கம் சுகுமார். சேனையூர் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்ற இவர் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றி, பிரித்தானியாவுக்குப் புலம்பெயரும் வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண் கலைத்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். அரங்கியல் துறையில், கூத்துப் பண்பாட்டுத்துறையில் மிகுந்த ஆளுமை மிக்கவர்.
On line Black-jack in the Asia Finest in Blackjack Casinos to own 2024
Posts Mermaids Pearl casino: Black-jack games variations *⃣ What are the better Uk on the web black-jack game to play which have a real income?