தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 128 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8354- 80-3. சாஹித்தியரத்னா விருது இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலக்கியத்திற்கான உயரிய விருதாகும். 2002ஆம் ஆண்டிலிருந்து இவ்விருது வருடாவருடம் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழியல் துறையில் இதுவரை 17 பேர் இவ்விருதினைப் பெற்றுள்ளார்கள். இதில் பதினொருவர் ஆக்க இலக்கியப் படைப்பாளிகள். அறுவர் பல்வேறு துறைசார்ந்த புலமையாளர்கள். ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்கள் இவ்வாளுமைகள் பற்றி ‘தினக்குரல்” வார இதழ்களில் எழுதிய கட்டுரைத் தொடரே இங்கு நூலுருவாக்கப்பட்டுள்ளது. வரதர் (தி.ச.வரதராஜன்), சொக்கன் (க.சொக்கலிங்கம்), பேராசிரியர். கா.சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, பண்டிதர் க.சச்சிதானந்தன், இ.முருகையன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், செங்கை ஆழியான் (க.குணராசா), முகம்மது சமீம், பேராசிரியர் சபா ஜெயராசா, பேராசிரியர் க.அருணாசலம், தெணியான் (நா.க.நடேசு), தெளிவத்தை ஜோசப், முல்லைமணி (வே.சுப்பிரமணியம்), பேராயர் எஸ்.ஜெபநேசன், நீர்வை பொன்னையன், மு.பொன்னம்பலம் ஆகியோரின் ஆளுமைத் தடங்கள் பற்றிய பதிவுகளாக இக்கட்டுரைகள் அனைத்தும் அமைந்துள்ளன.