14958 பேராசிரியர் ம.மு.உவைஸம் இஸ்லாமிய தமிழ் இலக்கியமும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 32 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-83-1. பேராசிரியர் உவைஸ், 15.01.1922 இல் பாணந்துறை பிரதேசத்திலுள்ள ஹேனமுல்லையில் பிறந்தவர். 1927இல் ஹேனமுல்லை முஸ்லிம் தமிழ் பாடசாலையில் சேர்ந்து ஆரம்பக் கல்வியைப் பெற்றவர். பாணந்துறையில் புனித யோவான் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பின்னர், அதே கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுகப் படிப்பில் சேர்ந்து தமிழ், சிங்களம், வரலாறு, ஆட்சியியல் முதலிய பாடங்களைப் படித்து தேர்ச்சியடைந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் 1946 ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர், தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் வழிகாட்டலும், ஊக்கமும் உவைசுக்கு பேருதவியாக அமைந்தன. தமிழில் கலைமாணிப் பட்டத்தை (இளங்கலை) 1949 ஆம் ஆண்டு பெற்றார். பின்னர் தமிழ் முதுமாணிப் பட்ட (முதுகலை) பாடத்தைப் படிக்க பதிவு செய்தார். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ‘இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டு” என்னும் ஆய்வேட்டையும் சமர்ப்பித்தார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1962 ஆம் ஆண்டு தமது கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக, ‘தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியக் காப்பியங்கள்” என்னும் தலைப்பை பதிவு செய்தார். இவரது ஆய்வுக்கு நெறியாளராக விளங்கிய பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் திடீர் மறைவினால் ஆய்வு தற்காலிகமாக நின்றுவிட்டது. இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக பேராசிரியர் சு. வித்தியானந்தன் நியமனம் செய்யப்பட்ட பின்பு 1971 ஆம் ஆண்டு தமது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு 1975 ஆம் ஆண்டு ஆய்வை சமர்ப்பித்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். இலங்கையில் தமிழ்த்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றார். தமிழ்ப் பேரறிஞர் உவைஸ் இஸ்லாமியத் தமிழிலக்கியத்திற்கு ஆற்றியுள்ள மிகப்பெரிய தொண்டாகக் கருதக் கூடியது, தமிழக அறிஞர் டாக்டர் அஜ்மல் கானுடன் இணைந்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் சார்பாக எழுதிய ‘இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு” ஆகும். இந்த வரலாறு ஆறு தொகுதிகளைக் கொண்டது. தமிழ் இலக்கியத்தின் பால் உலகின் கவனத்தைத் 928 இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் 552 நூல் தேட்டம் – தொகுதி 15 திருப்பிய பேரறிஞர் மன்ற மேடைகளிலே, மாநாட்டரங்கங்களிலே சொற்பொழிவுகளாற்றி, ஆய்வுக் கட்டுரைகள் படித்து, முஸ்லிம் மக்களைப் பெருமை கொள்ள வைத்தவர். ஏராளமான எழுத்தாளர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வளர்த்துவிட்டவர். தன் அறிவினால், தன்னடக்கத்தினால் அறிஞர் உலகை ஆட்கொண்ட பேராசிரியர் உவைஸ் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் மறைந்தார். அவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியில் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் இங்கு விபரிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக தமிழ் ஆளுமைகள் தொடரில் ஐந்தாவது நூலாக வெளிவந்துள்ள இப்பிரசுரம், ஜீவநதி வெளி யீட்டகத்தின் 108ஆவது பிரசுரமுமாகும்.

ஏனைய பதிவுகள்

14732 அபோபிஸ்-2036 (விஞ்ஞான நாவல்).

எம்.எஸ்.எம். ஜிப்ரி. கொழும்பு 10: எஸ். கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-56 பக்கம், விளக்கப்படங்கள்,

12113 – புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர்: 11.6.2001.

மலர் வெளியீட்டுக் குழு. புத்தளம்: ஆலய பரிபாலன சபை, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், மன்னார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (கொழும்பு 13: வானதி பிரின்டர்ஸ், 171, ஸ்ரீகதிரேசன் வீதி). (24),

14242 ஸ்ரீ ஸ்தோத்திர மஞ்சரி.

தொகுப்பாசிரியர் விபரமில்லை. கொழும்பு 11: இராஜேஸ்வரி வெளியீடு, 1வது பதிப்பு, வெளியிட்ட ஆண்டு விபரம் இல்லை. (கொழும்பு 11: இராஜேஸ்வரி அச்சகம்).32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. இந்நூலில் ஸ்ரீ கணேச

14708 பனிச்சங்கேணி அரசி: வரலாற்றுச் சிறுகதைகள்.

வாகரைவாணன். மட்டக்களப்பு: ஆரணியகம், 479/5, புதிய கல்முனை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, ஜுன் 2007. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). vii, 70 பக்கம், விலை: ரூபா 175., அளவு:

12886 – அல்மாத் தோட்டக் கணக்கப்பிள்ளை சுப்பையா சிவஞானம் நினைவு மலர்.

சிவஞானம் பிரபாகரன் (குடும்பத்தினர் சார்பாக). ஆள்கரனோயா: சுப்பையா சிவஞானம் குடும்பத்தினர், சீட்டன் இல்லம், இல. 6, மஹாகுடுகல குடியிருப்பு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (களனி: பிரின்ட்கெயார் குழுமம், இல. 77, நுண்கமுகொட பாதை).

12862 – திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை.

தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (14), 248 பக்கம், புகைப்படங்கள், விலை: