14959முத்திரையிற் பண்டிதமணி: முத்திரை வெளியீட்டு விழா மலர்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை, உரும்பிராய், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (8), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ. இது இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் நூறாவது பிறந்ததின நிறைவைக் குறிக்கும் விசேட மலர். ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய ஸ்வாமிகள் (அருளாசிச் செய்தி), மஹாராஜ ஸ்ரீ.சு.து. ஷண்முகநாதக் குருக்கள் (ஒரு சங்கல்பம்), சீ.விநாசித்தம்பிப் புலவர் (சுவை அமுதமென வாழி வாழி), க.சண்முகநாதன் (நல்விருந்து), பொ.பாலசுந்தரம்பிள்ளை (மேதை), சுந்தரம் டிவகலாலா (நல்லாசான்), அ.க.சிவஞானசுந்தரம் (மூதறிஞர் பண்டிதமணி), இ.நமசிவாயதேசிகர் (பண்டிதமணியின் சீர்த்தி நீடுவாழ்க), சேந்தன் (நாவலர் தம் மரபில் வந்தோன்), மு.கந்தையா (பிரார்த்தனை உரை), தங்கம்மா அப்பாகுட்டி (முத்திரையிற் பண்டிதமணி), அ.சண்முகதாஸ் (பண்டிதமணி நீடூழி வாழ்வார்), அ.கி.பத்மநாதன் (ஒரே ஆண்டில் 1899 இரு தமிழ் அறிஞர்கள்), செ.பாலச்சந்திரன் (தித்திப்பான செய்தி), சோ.பத்மநாதன் (பொன்னாள்), சி.தர்மராஜன் (கல்விக் கண்கள்), இ.சிவகுருநாதன் (தினகரனிற் பண்டிதமணி), ம.வ.கானமயில்நாதன் (தமிழுக்கும் சைவத்துக்கும் பெருமை), ஆ.மகாலிங்கம் (ஈழத்துத் தமிழறிஞர்), பொன் பாக்கியம் (பண்டிதரையாவின் புகழ் பல்லாண்டு வாழும்), முருகையன் (முத்திரை வெளிவரல் நன்றே), சொக்கன் (இன்று அவரின் திருமுகம் முத்திரையிற் பெற்றோம்), மா.த.ந.வீரமணி ஐயர் (முத்திரை பொறித்த மூதறிஞர்), மன்னவன் மு.கந்தப்பு (என்றும் நினைவோம் இனிது), க.சச்சிதானந்தன் (முத்திரையிற் காண்போம் முகம்), இ.செல்லத்துரை (குரு வணக்கம்), வை.க.சிற்றம்பலம் (ஒரு ஞாபக முத்திரை), உடுப்பிட்டி மணிப்புலவன் (எங்கள் பண்டிதமணி), ச.தங்க மாமயிலோன் (பண்டிதமணித்துவம்), ம.பார்வதிநாதசிவம் (உலகெங்கும் பண்டிதமணி), இ.கந்தையா (பண்டிதமணி ஆசிரியர்க்கு ஆசிரியர்), சோ.பரமசாமி (சீர்பெறவோர் முத்திரையும் வெளியிட்டார்), வரதர் (பண்டிதமணி அவர்கள் அனுப்பிய திருமண வாழ்த்து), குமாரசாமி சோமசுந்தரம் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), தினகரன் வாரமஞ்சரி (தினகரன் பண்டிதமணியின் நூற்றாண்டு விழா), செல்லப்பா நடராசா (முத்திரைகள் பல பதித்த பண்டிதமணிக்கோர் முத்திரை), அ.பஞ்சாட்சரம் (பண்டிதமணி அவர்களும் அவர் பெற்ற பாராட்டுகளும்), ப.கோபாலகிருஷ்ணையர் (நாவலர் வழியில் நற்பணியாற்றிய பண்டிதமணி), க.உமாமகேஸ்வரன் (முத்திரை பதித்தவருக்கு முத்திரை), ராஜஸ்ரீகாந்தன் (வாழ்வியலின் அருஞ்செல்வம்), வ.சிவராசசிங்கம் (இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் இலக்கியப்பணி), த.செல்வநாயகம் (தமிழால் உயர்ந்தோர்), எஸ்.ஜெபநேசன் (பண்டிதமணி நினைவு), சு.செல்லத்துரை (முத்திரையும் பெற்றது நற்பேறு) ஆகிய பெரியோர்களின் ஆக்கங்களுடன் இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. மலர்க்குழுவில் அ.பஞ்சாட்சரம், சு.செல்லத்துரை, சோ.பரமசாமி, பண்டிதை பொன் பாக்கியம், வே.தனபாலசிங்கம், மன்னவன் மு.கந்தப்பு ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 23394).

ஏனைய பதிவுகள்