ந. சி. கந்தையாபிள்ளை. சென்னை: முத்தமிழ் நிலையம், எம். சக்கரவர்த்தி நயினார், Cottage Industries Publishing House, 2வது பதிப்பு, பெப்ரவரி 1947, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1946. (மதராஸ்: T.V.C. Press 329 , Mint Street, G.T.Madras). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. இந்நூலில் ஆதி மக்கள், மக்கள் ஓரிடத்தினின்றும் பிற இடங்களுக்கு ஏன் சென்றார்கள்? நாவலந் தீவின் அழிவு, நாவலந் தீவின் நாகரிகம் வளர்ச்சியுற்றிருந்ததென்பதற்குச் சான்று, குமரி நாடு, குமரி நாட்டின் அழிவும் அங்கு வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவிற் குடியேறுதலும், நாவலந்தீவு, நாவலந்தீவினின்றும் சென்று மக்கள் பிற நாடுகளிற் குடியேறுதல், சிந்து வெளி மக்கள், எகிப்தியர், சுமேரியர், பாபிலோனியர், அசீரியர், யூதர், பினீசியர், சீரியர், சின்ன ஆசிய மக்கள், எற்றூஸ்கானியர், கிரேத்தா மக்கள், பாஸ்க்கு மக்கள், துரூயிதியர், அமெரிக்கர், இக்கருத்துக்கள் புதியனவல்ல, ஆரியர், ஆரியருக்கும் தமிழருக்கும் இடையிற் போர், ஆரியர் தமிழரின் கொள்கைகளைப் பின்பற்றுதல், மக்கட் குலங்கள், ஹெரஸ் பாதிரியார் இந்திய வரலாற்று இதழில் எழுதியிருப்பதன் சுருக்கம், பார்ப்பனர் யார்? வடமொழி-தென்மொழிக் கலப்பு, பெரிய வெள்ளப் பெருக்குக்குப் பிற்பட்ட மக்கள் அல்லது ஹமித்திய இந்திய மத்தியதரை மக்கட்குலம், மொஹஞ்சதரோ நாகரீகமும் கீழ்நாட்டு ஆராய்ச்சியாளரும், திராவிடநாகரீகம், திராவிடம், நாகரீகத்தின் தொட்டில் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்து நவாலியூர் ந. சி. கந்தையாபிள்ளை (1893-1967) தமிழர் வரலாறு தொடர்பாக தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழகம், வரலாற்றுக் காலத்திற்க முற்பட்டபழந்தமிழர், நமது நாடு, நமது மொழி முதலான ஏராளமான நூல்களை வெளியிட்டவர். எளிய பாமர மக்களும் படித்துப் பலன் பெறுமாறு உரைநடையில் தமிழ் இலக்கியங்களை அக்காலத்தில் வழங்கிவந்தவர். இவர் யாழ்ப்பாணத்தில் கந்தரோடையில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார். அவ்வூரிலேயே கல்வி கற்றுத் தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும் போதே ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். சில காலம் மலேயாவில், பிரித்தானியா தொடர்வண்டி சேவையில் சில காலம் பணியாற்றினார். பின்னர் இலங்கை திரும்பி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவர் நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளான இரத்தினம்மாவைத் திருமணம் செய்தார். அவர் நவாலியூர் ந.சி.கந்தையாபிள்ளை என்றே பரவலாக அறியப்பட்டிருந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 01277).
Finest real money casino games Online poker A real income Internet sites to have Us People 2024
The fresh thrill of your chase try palpable since these jackpots grow with every choice, undertaking an excellent crescendo of adventure simply paired by the