14992 நாக இனக்குழுவும் இலங்கைத் தமிழரும் (அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு).

பரமு.புஷ்பரட்ணம். யாழ்ப்பாணம்: சேர் பொன் இராமநாதன் நினைவுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுன் 2018. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்). (2), 50 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையின் தலைவரும், சிரேஷ்ட பேராசிரியருமான பரமு புஷ்பரட்ணம் அவர்கள் 12.06.2018 அன்று கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்திய சேர் பொன் இராமநாதன் நினைவுப் பேருரையின் (2018) நூல்வடிவம் இதுவாகும். கற்காலப் பண்பாடு, நுண்கற்கால மக்கள் (Mesolithic People), பெருங்கற்காலப் பண்பாடு ஆகியவற்றினூடாக, புகைப்படச் சான்றுகளுடன் அண்மைக்காலத் தொல்லியல் கண்டபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு நாக இனக்குழுவும் இலங்கைத் தமிழரும் பற்றிய இவ்வாய்வினை மேற்கொண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்