14993 யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் தொல்பொருளியல் மரபுரிமை.

மாலினீ டயஸ், சுனில் பண்டார கோரளகே, எம்.வீ.ஜீ. கல்ப அசங்க (சிங்கள மூலம்), எம்.எம்.ஹலீம் டீன் (தமிழாக்கம்). கொழும்பு 7: தொல்பொருளியல் திணைக்களம், ஸ்ரீமத் மார்கஸ் பர்ணாந்து மாவத்தை, 1வது பதிப்பு, 2016. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). ஒiஎ, (20), 229 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN: 978-955-9159-99-5. ‘யாழ்ப்பாணத் தீபகற்பம் பற்றி அறிமுகம்”, ‘யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான தொல்பொருளியல் இடங்கள் சிலவற்றினது விபரங்கள்” , ‘யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தீவுகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நெடுந்தீவு”, ‘யாழ்ப்பாணத்தில் கிடைக்கப்பெறுகின்ற ஏனைய தொல்பொருளியல் மற்றும் வரலாற்றுப் பெறுமதியான இடங்கள்” ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு தொல்லியல் மதிப்புள்ள இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவை பற்றிய குறிப்புகளும் படங்களும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65668).

ஏனைய பதிவுகள்

15492 உதிராக் குரும்பட்டிகள்.

த.ரமேஸ். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (களுதாவளை: மாருதி அச்சகம்). xx, 80 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×15.5