14994 அது இது எது: தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு ஆளுமைகளுடனான நேர்காணல்கள்.

முத்தையா வெள்ளையன். சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி-74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2008. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 150 பக்கம், விலை: இந்திய ரூபா 65.00, அளவு: 22×14 சமீ. இலங்கை இந்திய தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு ஆளுமைகளுடனான நேர்காணல்களின் தொகுப்பு இது. முன்னுரை- பதில்களின் ஊடாக (ராமாநுஜம்), நேர்காணலும் ஒரு படைப்பிலக்கியம் தான் (முத்தையா வெள்ளையன்), எழுத்துக்குச் சாதியைப் பூசாதீர் (மாத்தளை சோமு), தமிழர்கள் அறிவுபூர்வமாக வாழவேண்டும் (ச.அ.டேவிட்), நாங்கள் மூன்றாம் பாலினம் அல்ல (ஆஷா பாரதி), தொல்காப்பியம் தமிழர்களுக்காக எழுதப்படவில்லை (கா.சிவத்தம்பி), பன்மைத் தத்துவத்தில் நம்பிக்கையுண்டு (மௌனகுரு), ஆங்கிலத்தை மொழியாக கற்பதில் தவறு இல்லை (சுப வீரபாண்டியன்), மனித சமூகத்தின் வளர்ச்சியின் உச்சம் தான் கலை (யூமா வாசுகி), அம்மன் வரலாறே சோகமான வரலாறுதான் (ஆ.சிவசுப்பிரமணியன்), தப்பு அடிக்கல, பொணமும் எரிக்கல்ல, அப்படியே இருந்துக்க (சிந்தாமணி) ஆகிய தலைப்புகளில் இந்நூலின் நேர்காணல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49333).

ஏனைய பதிவுகள்