14995 அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் (தொகுதி -2).

பதிப்பாசிரியர் குழு. சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600014: இலட்சுமி ஏஜென்சீஸ், 23/11, பெருமாள் முதலி தெரு, இராயப்பேட்டை). xiv, 442 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியில் வெளிவந்துள்ள இத்தொகுப்பில் ‘நாவல்” என்ற முதலாவது பிரிவில், ஈழத்தில் மலையக நாவல் இலக்கியத்தின் பங்களிப்பு (எஸ்.வை.ஸ்ரீதர்), மலையகத் தமிழ் நாவல்களில் இலங்கைவாழ் இந்திய வம்சாவழித் தமிழர்களின் சமூகப் பிரச்சினைகளும் வெளிப்பாட்டு முறைமைகளும் (பத்மநாதன் கலாவல்லி), இலங்கைத் தமிழ் நாவல் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு (த.அஜந்தகுமார்), இலங்கை மலையகப் பெண் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள் (து.ஜானகி), அண்மைக்கால இலங்கைப் படைப்புகளில் எஸ்.ஏ.உதயனின் நாவல்கள்-ஓர் ஆய்வு (சு.குணேஸ்வரன்), ராஜேஸ்வரியின் ‘நாளை மனிதர்கள்” புதினத்தில் பண்பாட்டுப் பதிவுகள் (க.முருகேசன்), ‘பனி பெய்யும் இரவுகள்” புதினத்தில் மனப்போராட்டங்கள் (மு.நாகராஜன்), ‘சயாம்-மரண இரயில்” நாவலில் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலை (ம.சித்ரா), முத்தம்மாள் பழனிச்சாமியின் ‘நாடு விட்டு நாடு” நூல்வழி அறியலாகும் மலேசிய தமிழ்ச் சமுதாயச் சூழல்-ஐம்பதுகளுக்கு முன் (ப.சத்யா), ஆகிய கட்டுரைகளும், ‘இணையத்தளம்” என்ற இரண்டாவது பிரிவில் அயலகத் தமிழர்களின் இணையத்தள இலக்கியப் படைப்புகள் (சுகந்தி வெங்கடேஷ்), இணைய உலக இலக்கியப் படைப்புகள் (செ.சு.நா.சந்திரசேகரன்), புகலிடத் தமிழர்களின் இணைய இதழ்கள் (பா.உமாசங்கரி), கனேடியத் தமிழர்களின் இணையத்தள இலக்கியப் படைப்புகள்-ஒரு மதிப்பீடு (எஸ்.சிதம்பரம்) ஆகிய ஆக்கங்களும், ‘பொது” என்ற மூன்றாவது பிரிவில், அயலகத் தமிழரும் தமிழ் இலக்கியப் படைப்புகளும் (க.சசிரேகா), 19ஆம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (துரை மனோகரன்), ஈழத்து நாட்டார் இலக்கியம் வழி வாழ்வியல் (ஏ.மேனகா), ஈழத்தமிழரின் மரபுசார் தமிழ் இலக்கிய உறவுகள் (ஊ.கன்னியப்பன்), ஈழத்துப் பேச்சு வழக்குத் தமிழும் யாழ்ப்பாணத் தமிழும் ஓர் மொழியியல் ஆய்வு (வேல் நந்தகுமார்), ஈழத்துக் கவிஞர் இ.முருகையனின் மொழி, இலக்கணச் சிந்தனைகள்: ஓர் அறிமுகக் குறிப்பு (செல்லத்துரை சுதர்சன்), ஈழத்தில் சைவத் தமிழ்க் கல்வியும் நவீனத்துவமும் (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இலங்கையின் பங்களிப்பு (செ.யோகராசா), நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதிய வகைப்பாடு-ஈழத்துப் போர் இலக்கியம் (தி.ஞானசேகரன்), இலங்கைத் தமிழ் இதழ்களில் இலக்கியப் படைப்புகள் (சௌ.பா.சாலாவாணிஸ்ரீ), அயலகத் தமிழ் இதழ் ‘இந்து சாதனம்”: யாழ்ப்பாணம் இலங்கை பழந்தமிழ் இதழ் (இல.செ.திருமலை), ஈழத்தில் தமிழ் அகராதி முயற்சிகள் 1939 வரை (ஞா.பாலச்சந்திரன்), கவிஞர் சேரனின் கட்டுரைத் தொகுப்புகளில் தமிழ்ச் சமூகமும் அரசியலும் (சி.கோபியா), ஈழத்து அரங்க எழுச்சியில் ‘பொங்கு தமிழ்” நாடக அரங்கு (யாழ். தர்மினி பத்மநாதன்), சிங்கப்பூர் தமிழ் நாடகங்கள் நோக்கும் போக்கும்: 1935 முதல் 2007 வரையிலான வரலாற்றின் வழி (கே.இரா.கமலா முருகன்), ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் தமிழ்ப் பணிகள் (மார்க்கண்டன் ரூபவதனன்), சுவாமி விபுலானந்தரின் தமிழியல் ஆய்வுகள் 1892-1949 (அம்மன்கிளி முருகதாஸ்), மலேசியாவில் தமிழியல்-புதிய போக்குகள், பதிய பாதைகள் (பா.கௌசல்யா), மலேசியத் தமிழ்ச் சிறுவர் இலக்கியம் (எஸ்.குமரன்), அமெரிக்க பெண் படைப்பாளி காஞ்சனா தாமோதரனின் மொழிநடை (கி.ஜமுனா, கு.சிதம்பரம்), பிரான்சு நாட்டுப் படைப்பாளி நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துலகம் (மு.இளங்கோவன்), நெதர்லாந்து படைப்பாளி கலையரசனின் அகதி வாழ்வியல்-பயணங்கள்- உரிமைகள் (கு.சிதம்பரம்), சீனத்தில் விளைந்த தமிழ்ப் படைப்புகள் (ந.கடிகாசலம்), சீன வானொலியின் தமிழ்நூல்களும் படைப்பாளர்களும் (தங்க.ஜெய்சக்திவேல்), Folk Songs of Sri Lanka (எம்.ஏ.பகீரதி), Eelam Novelist S.Ganeshalingam’s ‘Long Journey’ as an Epic told in Lyric Parts (என்.முருகையன்) ஆகிய 39 படைப்பாக்கங்களும், இத்தொகுப்பின் பதிப்பாசிரியர் குழுவில், தமிழகத்தின் முனைவர்களான கோ.விசயராகவன், மு.வளர்மதி, கு.சிதம்பரம், து.ஜானகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52990).

ஏனைய பதிவுகள்

Paybox Kasino Erreichbar

Content Schnelle Auszahlungen Pass away Arten Vom Online Spielbank Short message Payment Sind Akzeptiert? Nachfolgende Beste Sonstige Online Spielbank Zahlungsmethode Er hat zigeunern auf das

GratoGana opiniones

Opiniones de Gratogana y análisis 2022 ¿Es un casino fiable? Una vez que os registréis, encontraréis muchas características únicas. Este casino es perfectamente compatible con