14996 அயோத்தியிலிருந்து இலங்கை வரை.

கி.ராதாகிருஷ்ணன். சென்னை 600017: திருமகள் நிலையம், 55, வெங்கட்நாராயணா ரோடு, தி.நகர், 1வது பதிப்பு, ஜுன் 1985. (சென்னை 600033: தென்றல் பிரிண்டர்ஸ்). ii, 268 பக்கம், விலை: இந்திய ரூபா 21.00, அளவு: 18×11 சமீ. இந்நூலின் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1952இல் இந்திய பொலிஸ் சேவையில் இணைந்தவர். 1982இல் தமிழக காவல்துறையின் ஊழல் ஒழிப்புப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றியவர். கிராக்கி என்ற புனைபெயரில் தன் இலக்கியப் படைப்புக்களை வெளியிட்ட இவர் சங்க இலக்கியங்களிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர். இந்நூலில் வால்மீகி, கம்பன், காளிதாஸர் ஆகிய மூவரையும் இராமாயணம் என்னும் பொதுப்புள்ளியில் வைத்து, அவர்கள் வாயிலாகவே தங்களைப் புலப்படுத்திக் கொள்ளும்படி விட்டிருக்கிறார். இவர்களது மூன்று நூல்களிலிருந்தும் அரிய பொறுமையுடன் ஒப்பான பகுதிகளைத் தேர்ந்து கதையில் வரும் முறையிலேயே ஏழு பகுதிகளாகப் பிரித்து ஒழுங்குபட அமைத்துள்ளார். அத்துடன் ஒவ்வொன்றிற்கும் சுருக்க உரையும் சேர்த்துள்ளார். அயோத்தியிலிருந்து மிதிலை வரை, அயோத்தியிலிருந்து நந்திக் கிராமம் வரை, நந்திக்கிராமத்திலிருந்து தண்டகாரண்யம் வரை, தண்டகாரண்யத்திலிருந்து கிட்கிந்தை வரை, கிட்கிந்தையிலிருந்து இலங்கை வரை, இலங்கையிலிருந்து அயோத்தி வரை, திருமுடிசூட்டு விழா ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதிமுடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14470 சித்த மருத்துவம் 1990/91.

என்.ஸ்ரீசுப்பிரமணியம் (இதழாசிரியர்), க.ஸ்ரீதரன் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). xviii, 64 பக்கம், தகடு, விலை:

12394 சிந்தனை: தொகுதி I இதழ் 2 (சித்திரை 1976).

அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). (6), 75