14997 ஆமாம் கனம் நீதிபதி அவர்களே (ஒரு மூத்த வழக்கறிஞரின் அனுபவச் சிதறல்கள்).

இரா. காந்தி. சென்னை 600 094: உலகத் தமிழர் பதிப்பகம், 4, சௌராட்டிரா நகர், 7ஆவது தெரு, சூளைமேடு, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2011, 1வது பதிப்பு, ஜுலை 2010. (சென்னை 600 094: உலகத் தமிழர் பதிப்பகம், 4, சௌராட்டிரா நகர், 7ஆவது தெரு, சூளைமேடு). 272 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22×15 சமீ. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி ஈழத்தமிழர்களுடன் நெருங்கிய உறவினைப் பேணிவந்தவர். மறவன்புலவு க.சச்சிதானந்தன் உள்ளிட்ட பல தமிழர்களுக்காக தமிழக நீதிமன்றங்களில் வாதாடியவர். இந்நூலில் அவரது வாழ்க்கை அனுபவங்கள் 25 அத்தியாயங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 11ஆவது இயலில் ‘ஈழமும் நானும்” என்ற தலைப்பில் ஈழத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றார்.

ஏனைய பதிவுகள்