பெ.இராஜேந்திரன் (தொகுப்பாசிரியர்). கோலாலம்பூர்: மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 21B, Jalan Murai Dua, Batu Compleks, Off Batu 3 Jalan Ipoh 52100, 1வது பதிப்பு, 2015. (செலாங்கூர்: சம்பூர்ணா பிரின்டர்ஸ் சென். பெர்., No.1, Jalan Tie 1/19, Taman Industri Bolton, Batu caves). 154 பக்கம், புகைப்படங்கள், விலை: மலேசிய ரிங்கிட் 20.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978- 967-13758-0-8. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 14.12.2015 இல் இடம்பெற்ற மலேசிய-இலங்கை தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட மலேசிய இலக்கியவாதிகள், ஆய்வாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பு இது. மலேசியத் தமிழ் எழுத்துலகமும் அதன் வளர்ச்சிக்கு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆற்றியுள்ள பங்கும் (ரெ.கார்த்திகேசு), 1980ஆம் ஆண்டுகளுக்குப் பின் மலேசியாவின் தமிழ்ப் பத்திரிகை (பெ.இராஜேந்திரன்), மலேசியத் தமிழ்க் கல்வியின் தொடக்கமும் வளர்ச்சியும் இன்றைய சவால்களும் (பன்னீர்செல்வம் அந்தோணி), மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதையியல் அகவயச் சிந்தனைகள் (இராஜம் காளியப்பன்), மலேசிய விடுதலைக்குப் பின்னர் தோன்றிய மலேசியத் தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும் (சேகர் நாராயணன்), மலேசியத் தமிழ் தொடக்கப்பள்ளி மாணவர்களின் இலக்கிய ஆற்றலை வளர்ப்பதில் தமிழ்மொழிப் பாடத்தின் பங்கு (மோகன் பழனியாண்டி), இன்றைய மலேசியச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் (எம்.சேகர்), வானொலி மின்னல் பண்பலையில் தமிழ் பயன்பாடு (பார்த்தசாரதி), இலக்கியப் பயணங்களால் விளைந்த நன்மைகள் (ஆஷா குமரன்), தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் இலக்கியப் பரிசுகள் ஆகிய ஆக்கங்களை இக்கட்டுரைத் தொகுப்பு உள்ளடக்குகின்றது.