15009 தேடல்கள்: வரலாற்று உண்மைகளின் தேடல்கள்.

கமலினி கதிர் (மூலம்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 600 094: ஆதிலட்சுமி பிரிண்டர்ஸ்).

x, 182 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-86031-86-0.

தன் வாசிப்பினூடாக அறிந்துகொண்டுள்ளவற்றை குடும்ப உறவுமுறையாகத் தான் சிருஷ்டித்த கதாபாத்திரங்களின் மூலமாக, அவர்களின் அன்றாட உரையாடல்களினூடாக பதிவுசெய்யும் ஒரு புதிய உத்தியைக் கையாண்டு இந்நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். அறிவியல் தரவுகளையும், ஒழுக்கவியல் பண்புகளைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தையும் தன் உரையாடல்களுக்குள் பொதித்துவைத்து சுவையானதொரு நாவல் போன்று 38 அத்தியாயங்களினூடாக இந்நூலில் வழங்கியிருக்கிறார். பூமிகா என்ற பாத்திரத்தினூடாக தாயகத்தின் அவலங்களை பேசவைத்திருக்கிறார். தொல்காப்பியத்தில் இருந்து உடல் உறுப்புகள், சமூகவியல், மொழி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலைகள், இலக்கியம், வரலாறு, புவியியல் என இவர் தொட்டுச்செல்லாத துறைகளே இல்லையோ என்று எண்ணும் அளவுக்கு உரையாடல்களில் எராளமான தகவல்களை சுவையாகவும், சலிப்புத் தட்டாமல் வாசிக்கும் வகையிலும் மிகக் கவனமாக உரையாடலின் தொடர்பு அறுந்துவிடாத வகையிலும் தனது நேர்த்தியான வசனநடையில் இந்நூலை எழுதியிருக்கிறார். ஏன் என்று அறிவோமா என்ற இவரது நூலின் தொடர்ச்சியாக அதே பாணியில் இதனையும் எழுதியிருக்கிறார். 

ஏனைய பதிவுகள்

Online Slots Im Cosmo Casino

Content Top 5 Spiele Mit Der Höchsten Auszahlungsrate Die 10 Besten Paypal Online Casinos Im Detail Die Beliebtesten Online Casino Zahlungsmethoden Mit etwas Glück kannst