15107 கதிர்காம புராண வசனம்.

சி.தாமோதரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: ச.முருகேசு, தொல்புரம், 2வது பதிப்பு, 1937, 1வது பதிப்பு, 1930. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(16), 48 பக்கம், விலை: சதம் 50, அளவு: 22.5×19.5 சமீ.

சமாதான நீதிபதி ஸ்ரீமான் க.நமசிவாயம் அவர்கள் விருப்பத்தின்படி, வித்துவான் ஸ்ரீமத் சி.தாமோதரம்பிள்ளையவர்கள் இயற்றிய இந்நூலின் இரண்டாம் பதிப்பு, அவரது சகோதரன் சி.நாகலிங்கம்பிள்ளையவர்கள் உத்தரவுப்படி, குகனடியார்களுக்கு உபயோகமாகும் பொருட்டு யாழ்ப்பாணத்துத் தொல்புரம் ச.முருகேசு அவர்களால் அச்சிடுவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் நைமிசப் படலம், திருவவதாரப் படலம், தாரகன் வதைப் படலம், வழிநடைப் படலம், எமகூடப் படலம், சூரபன்மன் வதைப் படலம், கதிர்காமகிரிப் படலம், திருமணப் படலம், மீட்சிப் படலம், கதிர்காம சைல மான்மியப் படலம், கதிர்காமநகர விசேடப் படலம், அபகீர்த்தி முத்திபெறு படலம், வேட்டுவக் கள்வர் அருள்பெறு படலம், பாவதீபன் அருள்பெறு படலம், தேவர் கலிவலி வென்ற படலம், வணிகர் தனம்பெறு படலம், மாதர் அருள்பெறு படலம் ஆகிய 17 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்