15109 கோவிலின் அமைப்பும் விஞ்ஞான விளக்கமும்.

சுவாமி பிரபாகரனானந்த சரஸ்வதி. கொழும்பு 4: சனாதன தர்மயுவ விழிப்புணர்ச்சிக் கழகம், இல. 3, றிஜ்வே இடம், 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(9), 10-35 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×16 சமீ.

இந்துக் கோவில்களில் ஆகமங்களில் கூறிய முறைக்கேற்ப சாஸ்திரமுறையில் கட்டப்பட்டு சிலைகள் ஸ்தாபிக்கப்படுகின்றன. கோயிற் கட்டிடம், கோபுரம், மூர்த்தங்கள் மற்றும் சிற்ப அமைப்பு, சித்திர வேலைப்பாடுகள் என்பனவும் தெய்வீக சாஸ்திர முறைகளை அடியொற்றி அமைக்கப்படுகின்றன. இந்த அடிப்படை சாஸ்திர முறைகளை விஞ்ஞானரீதியில் எளிமையாக விளக்க முனையும் நூல் இதுவாகும். இந்தியாவின் பாலக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள திவ்ய ஜீவன சங்கத்தின் தலைவர் சுவாமி பிரபாகரனானந்த ஸரஸ்வதி அவர்களின் விரிவுரைகளில் இருந்து தொகுக்கப்பட்டு சனாதன தர்ம யுவ விழிப்பணர்ச்சிக் கழகத்தினரால் (Youth League for Sanadhana Dharmic Perception (YLSDP)) வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்