15124 சேக்கிழார் குரு வழிபாடு. வி.கந்தவனம்.

கனடா: இந்து சமயப் பேரவை, ஒன்ராரியோ, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough).

vi, 130 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

புகலிட நாடுகளில் குறிப்பாக கனடாவில் கோயில்களிலும் சைவ அமைப்புகளின் சமய விழாக்களிலும் உரைகள் நிகழ்த்துவதோடு வானொலி வாயிலாகவும் சமய அறிவைப் பரப்பும்  பெரும்பணியில் ஈடுபட்டு வரும் கவிநாயகர் கந்தவனம் அவர்களின் உரைகளின் எழுத்துவடிவம் இங்கு 14 கட்டுரைகளாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இவை, குரு வழிபாடு, சம்பந்த மூர்த்தியாரின் சமூகப் பணிகள், நமனுக்கும் அஞ்சாத நாவுக்கரசர், சுந்தரர் சொற்றமிழ், மணிவாசகப் பெருமானின் பக்தி வைராக்கியம், சாத்திரம் விளக்கிய சந்தான குரவர், கச்சியப்பர் கனிந்த கந்தபுராணம், சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் புராணம், பரஞ்சோதி முனிவரின் தமிழ்ப் பற்றுப் புராணம், பட்டினத்தடிகளின் பக்குவப் பாடல்கள், அருணகிரிநாதரின் அற்புதத் திருப்புகழ், அமாவாசையை முழுமதியாக்கிய அபிராமிப்பட்டர், நாவலர் பெருமானின் சமயப் பணிகள், சேர் பொன் இராமநாதன் அவர்களின் சைவத் தொண்டுகள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Sites puerilidade Poker Grátis e conclamar

Content Confira esses caras: Ações dos Jogadores 🃏 Algum Contemporâneo vs. Jogos criancice Vídeo Poker Acessível Formas puerilidade Abichar Dentre as mais famosas estão anexar

17510 ஆனந்த ராகங்கள்.

ஆனந்தா ஏ.ஜீ.இராஜேந்திரம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி).  iv, 54 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,