15139 விநாயகர் புராணம்.

கே.வி.குணசேகரம். கொழும்பு: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 2வது பதிப்பு, 2019. 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 140 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN: 978-955-9233-98-5.

இந்து சமய அறநெறிக் கல்வியின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக வெளியிடப்படும் பாடத் துணை நூல். விநாயகரின் அற்புத மகிமைகளை இந்நூல் கதையாகக் கூறுகின்றது. விநாயகக் கடவுள், அறுகம்புல்லின் மகிமை, மூசிகம் வாகனமானது, சதுர்த்தி விரதத்தின் மகிமை, சங்கட சதுர்த்தி விரதப் பலன்கள், வேதவியாசர், பிரம்ம சிருஷ்டி, விநாயகர் திருமணம், மது கைடவர், பிணி நீக்கிய பேரருளாளன், வல்லாளனுக்கு அருளிய பெருமான், தக்கனுக்கு அரசு கொடுத்து அருளிய வரலாறு, முனிபத்தினியின் சாபம், இந்திரனுக்கு வந்த துன்பம், கிருச்சமதரின் தவம், முப்புரங்களையும் எரித்தல், அறுகை உண்டு பசி தீர்த்த விநாயகர், வன்னிலையின் மகத்துவம் விநாயகர், உலகளந்த வாமணர், பக்தனுக்கருளிய விநாயகர், சொர்க்கஞ் சேர்ந்த சூரசேனர், பரசுராமனுக்கு அருள் கொடுத்த விநாயகர், தலையிற் குட்டிய இராவணன், காவிரியைப் பெருக்கெடுத்தோடச் செய்த விநாயகர், சிந்தாமணி விநாயகர், சிந்தூரனை அழித்த விநாயகர், மயில்வாகனர், விநாயகரின் திருவிளையாடல்கள், மடோற்கரரின் மாய விளையாட்டு, தேவகாந்தகன் வதம், வக்கிரதுண்டர், வல்லபைக்கருளிய விநாயகர், சோமகாந்தன் முத்தி, பிள்ளையாரைப் பார்த்துச் சந்திரன் சிரித்த கதை, விநாயகர் புராணங் கேட்பதால் ஏற்படும் பலன்கள் ஆகிய 35 தலைப்புகளில் இக்கதைகள் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. நூலாசிரியர் ஓய்வுநிலைக் கோட்டக் கல்விப் பணிப்பாளராவார்.

ஏனைய பதிவுகள்

Play Publication Away from Ra

Content Συχνές Ερωτήσεις Για Το Guide Out of Ra Play Publication Out of Ra For real Currency State-of-the-art Plans And methods For Mastering Ra Board