15144 ஸலாம் சொல்வோம்.

மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ. குருநாகல்: தாருல் குர்ஆன் வெளியீட்டுப் பணியகம், இல. 100, கண்டி வீதி, மல்லவபிட்டிய, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி).

ix, 10-32 பக்கம், விலை: ரூபா 120.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42423-9-5.

மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீயின் ஸலாம் சொல்வோம் என்ற இந்நூல் இஸ்லாமியரின் ஸலாம் கூறும்-முகமன்கூறும்-வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும்-வரவேற்கும் அந்த முகமன் முறையைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறுகின்றது. ஸலாம்  கூறல் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். ”அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ” என்பது முஸ்லிம்களிடையே பரிமாறிக்கொள்ளும் முகமன் வார்த்தைப் பிரயோகமாகும். “படைப்பாளனானஅல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அபிவிருத்தியும் உங்கள்மீது உண்டாவதாக” என்பது இதன் பொருளாகும். இந்நூலில் ஸலாம் எனும் முகமன் வார்த்தையின் சிறப்பு, மிகவும் கஞ்சத்தனமான மனிதன் யார்? ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்ளுதல், ஸலாம் சொல்வதின் ஒழுங்கு முறைகள், ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள், ஸலாம் கூறுவது சிறந்ததா, பதில் கூறுவது சிறந்ததா?, ஸலாமிற்குப் பதில் கூறுவது, ஒரு மனிதருக்கு ஸலாம் கூறுவது, ஒரு கூட்டத்தாருக்கு ஸலாம் கூறுவது, அறிந்தோர் அறியாதோருக்கு ஸலாம் கூறுவது, ஸலாம் சொல்லி அனுப்புதல்-எழுதி அனுப்புதல், சிறியோருக்கு ஸலாம் கூறுதல், அவையில் நுழையும் போதும் அங்கிருந்து புறப்படும் போதும் ஸலாம் கூறுதல், கப்ராளிகளுக்கு ஸலாம் கூறுதல், பெண்களுக்கு ஸலாம் சொல்லலாமா?, ஆணுக்கு மஹ்ரமானோர், பெண்ணுக்கு மஹ்ரமானோர், வயோதிப பெண்களுக்கு ஸலாம் கூறுதல், பெண்கள் இவர்களுக்கும் ஸலாம் சொல்லக்கூடாது, முஸ்லீமல்லாதோருக்கு ஸலாம் கூறுதல், அடிக்கடி ஸலாம் கூறுதல், ஸலாமின் மூலம் அனுமதி பெறுதல், ஸலாம் சொல்லக்கூடாத நேரங்கள், விதண்டாவாதி மற்றும் அறிவீனர்களுக்கு ஸலாம் கூறுதல், வீட்டினுள் நுழையும்போது ஸலாம் கூறுதல், ஸலாம் சொல்வதன் மகத்துவம், உங்களுக்கோர் வேண்டுகோள் ஆகிய 25 தலைப்புகளில் இந்நூல் இஸ்லாமியரின் முகமன் முறையைப் பற்றி விரிவாக விளக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

15554 தொப்புள்கொடியும் தலைப்பாகையும்.

அன்புடீன் (இயற்பெயர்: கலந்தர் முகைதீன்). அட்டாளைச்சேனை: கவிதாலய கலை இலக்கிய மண்டலம், 1வது பதிப்பு, மார்ச் 2016. (சாய்ந்தமருது: எக்செலென்ட் பிரின்ட்). xv, 219 பக்கம், விலை: ரூபா 390.00, அளவு: 20.5×14.5 சமீ.,