15145 இலங்கையின் சமகால சமூக நெருக்கடிகள்: பல்பரிமாணப் பார்வை.

றமீஸ் அபூபக்கர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 246 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-643-4.

இந்நூல் கடந்த தசாப்தங்களில் இலங்கை எதிர்கொண்ட சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. இலங்கையில் போதைப்பொருள் பாவனையும் சவால்களும் (றமீஸ் அபூபக்கர்), இலங்கையில் இடம்பெறும் வீதி விபத்துக்கள்: ஒரு மீள்நோக்கு (எம்.றிஸ்வான்), சமூக நகர்வு: தேக்க நிலையிலிருந்து இயங்கியல் நிலைக்கு சமூகத்தை நகர்த்துதல் (எஸ்.எம்.அய்யூப்), இலங்கையின் மகப்பேற்றுச் சுகாதாரத்துறை: சேவை நாடிகளது மனப்பாங்குகளும் திருப்தி நிலையும் (யு.று.ே.நளீபா), இன முரண்பாட்டில் பாலின வகிபாகம் (என்.லும்னா ஷாபி), முஸ்லிம் அரசியலும் மேற்கிளம்பும் பிரதேசவாதமும்: அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட விமர்சன நோக்கு (றமீஸ் அப்துல்லா), சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான சட்ட மீறல் குற்றச்சாட்டுகள்: இலங்கையின் போருக்குப் பிந்திய அனுபவங்கள் (எம்.எம்.பாஸில்), இலங்கையில் உள்ளூர் ஜனநாயகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் (எம்.ஏ.எம்.பௌசர்), இலங்கை அரசியலில் சிங்கள-பௌத்த-முஸ்லிம் உறவு (ரீ.பாத்திமா ஸஜீதா), அண்மைக்கால திடீர் நாணய பெறுமதித் தேய்வும் இலங்கையில் அதன் சமூக பொருளாதார தாக்கமும் (எஸ்.எம்.அஹமட் லெப்பை), போரின் சமூக பொருளாதார தாக்கங்கள்: கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் நோக்கு (றமீஸ் அபூபக்கர்), இலங்கையின் கிராமிய அபிவிருத்தி: கல்லோயாத் திட்டம் முதல் கம்பெரளிய திட்டம் வரையான மீள்நோக்கு (என்.லும்னா ஷாபி) ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இந்நூலின் தொகுப்பாசிரியர் றமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Las vegas Ports On the web

Articles Slot secret forest – A few People To help you Straight back As the The united kingdomt Band Change Against Switzerland Courtroom Status Away